பள்ளி தலைமை ஆசிரியருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் ஓய்வு பெற்ற தலைமையாசிரியருக்கு பணி நிறைவு பாாட்டு விழா நடந்தது.
சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றிய வெங்கடேசன், நேற்று முன்தினம் பணி ஓய்வு பெற்றார். அவருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா பள்ளி வாளகத்தில் நேற்று நடந்தது.
பேரூராட்சி சேர்மன் ரோஜாரமணி தாகப்பிள்ளை தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரி யர் கழகத் தலைவர் கமருதீன், ஓய்வு பெற்ற டி.இ.ஓ.,க்கள் சுந்தரபாண்டியன், ஆரோக்கிய சாமி முன்னிலை வகித்தனர். புதிய தலைமை ஆசிரியர் முகமது கவுஸ் வரவேற்றார்.
சி.இ.ஓ., கார்த்திகா, மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் திருமால், தலைமை ஆசிரியர்கள் கலாபன், மதிவாணன், வேல்முருகன், கிருஷ்ணமூர்த்தி, அன்பழகன், ரொகையாபீ, நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்க சீனிவாசன், வியாபாரிகள் சங்க செயலாளர் குசேலன்.
ஆசிரியர்கள் முனுசாமி, ராஜேந்திரன், ஜெய் பிரதர்ஸ் கபடி கழகத் தலைவர் விஜயகுமார் வாழ்த்திப் பேசினர். வெங்கடேசன் ஏற்புரை வழங்கினார். பள்ளி ஆசிரியர்கள் சார்பில் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. உதவி தலைமை ஆசிரியை அன்புக்கரசி நன்றி கூறினார்.
மேலும்
-
மனித --- விலங்கு பிரச்னை: அதிகாரிகள் ஆலோசனை
-
'கல்வியில் சிறந்து விளங்கினால் தான் உயர்ந்த பதவிகளை அடைய முடியும்'
-
தெக்களூரில் குடிநீர் கேட்டு மக்கள் மறியல்; போலீசாரின் கைது நடவடிக்கையால் பரபரப்பு
-
மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: கலெக்டர் உறுதி
-
மொட்டை அடிக்க பணம் வசூலித்தால் நாவிதர்களின் ஊக்கத்தொகை நிறுத்தம்; திருத்தணி கோவில் இணை ஆணையர் எச்சரிக்கை
-
பயிர் கடன் தள்ளுபடியில் குளறுபடி; கலெக்டர் அலுவலகம் முற்றுகை