தீக்குளிக்க முயன்ற குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளி குடும்பத்தோடு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஆமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன், 40; இவர், தனது மனைவி அஞ்சலாட்சி, 36; பிள்ளைகள் கோகுல்நாத், 8; பூமிகா, 7; ஆகியோருடன், நேற்று காலை விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தவர், திடீரென அலுவலக வாசலில் நின்று, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.
உடன் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி எச்சரித்து கலெக்டரிடம் மனு அளித்து முறையிடும்படி கூறி அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் அளித்த மனு:
ஆமூர் கிராமத்தில் எங்களுக்கு சொந்தமான 10 சென்ட் வீட்டுமனை பூர்வீகமாக உள்ளது. எங்கள் கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர் ஒருவருக்கும் அங்கு இடம் உள்ளது. இதன் அருகே மந்தைவெளி புறம்போக்கு நிலம் உள்ளது.
அந்த இடங்களை அவர் ஆக்கிரமித்துக் கொண்டு எங்களுக்கு வழிவிடாமல் கடந்த 20 ஆண்டுகளாக பிரச்னை செய்து வருகிறார். மந்தைவெளி பகுதியில் உள்ள பொது நிலத்தில் இருந்த மரங்களையும் வெட்டி விற்றுள்ளார். எங்கள் இடத்திலிருந்து செல்வதற்கான பொது வழியை அவர் ஆக்கிரமித்துக்கொண்டு தகராறு செய்து வருகிறார்.
இது குறித்து, திருவெண்ணைநல்லுார் போலீசில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தொடர்ந்து, மந்தைவெளி பொது இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டு, எங்களுக்கும் வழிவிடாமல் மிரட்டி வரும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
தெலுங்கானாவின் வளர்ச்சிப் பயணத்திற்கு முழு ஒத்துழைப்பு; பிரதமர் மோடி உறுதி
-
சிபிஎஸ்இ விடைத்தாள் சர்ச்சை விவகாரம்; விளக்கம் கோரியது மத்திய அரசு
-
மனித --- விலங்கு பிரச்னை: அதிகாரிகள் ஆலோசனை
-
'கல்வியில் சிறந்து விளங்கினால் தான் உயர்ந்த பதவிகளை அடைய முடியும்'
-
தெக்களூரில் குடிநீர் கேட்டு மக்கள் மறியல்; போலீசாரின் கைது நடவடிக்கையால் பரபரப்பு
-
மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: கலெக்டர் உறுதி