கும்பாபிஷேகம்

அலங்காநல்லுார்: பெரிய இலந்தைகுளத்தில் உச்சிமாகாளி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.

சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க உச்சிமாகாளி அம்மன் கோயில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது. அம்மன், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன.

பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று (ஜூன் 2 )இரவு வள்ளி திருமணம் நாடகம் நடக்கிறது. ஏற்பாடுகளை கிராம மரியாதைக்காரர்கள், கிராம மக்கள் செய்திருந்தனர்.

Advertisement