வணிக காஸ் விலை ரூ.46 அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில், இம்மாதம் வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் விலை, மாற்றம் செய்யப்படாமல், 928.50 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், வணிக காஸ் சிலிண்டர் விலை, 46 ரூபாய் அதிகரித்துஉள்ளது.

இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், ஆகிய பொதுத்துறையை சேர்ந்த எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், ஹோட்டல் உள்ளிட்ட வணிகப் பிரிவுக்கு, 19 கிலோ எடையிலும், சமையல் காஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன.

இந்நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, உள்நாட்டில் மாதந்தோறும் முதல் நாளன்று, சமையல் காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்கின்றன.

தமிழகத்தில், இம்மாதம், வீட்டு காஸ் சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்படாமல், 928.50 ரூபாயாகவே நிர்ணயம் செய்யப் பட்டு உள்ளது.

வணிக காஸ் சிலிண்டர் விலை, 46 ரூபாய் உயர்ந்து, 3,237 ரூபாயில் இருந்து, 3,283 ரூபாயாக அதிகரிக்கப் பட்டுள்ளது.

Advertisement