சிறுமி பலாத்கார கொலை வழக்கு  இருவருக்கு 3 நாட்கள் ‘கஸ்டடி’ 

கோவை: சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் கைதான இருவரிடம் 3 நாட்கள் போலீஸ் கஸ்டடியில் விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார். 

சூலுார் அருகே 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சிறுமியின் பக்கத்து வீட்டை சேர்ந்த கார்த்தி மற்றும் உடந்தையாக இருந்த மோகன் கைது செய்யப்பட்டனர். இருவரிடமும் ஐந்து நாட்கள் போலீஸ் கஸ்டடியில் விசாரிக்க அனுமதி கோரி, கோவை முதன்மை போக்சோ கோர்ட்டில் சூலுார் போலீசார் மனு தாக்கல் செய்தனர்.  

சிறையில் அடைக்கப்பட்டிருந்த கார்த்தி, மோகன் ஆகியோர் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பின் பலத்த பாதுகாப்புடன் போக்சோ கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

விசாரித்த நீதிபதி பகவதியம்மாள், இருவரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிட்டார்.

Advertisement