துாய்மை எரிசக்தி சர்வதேச மாநாடு
கோவை: கோவை தொழில்நுட்பக் கல்லுாரி (சி.ஐ.டி.,) மற்றும் நார்வேயின் மேற்கு நார்வே பயன்பாட்டு அறிவியல் பல்கலை இணைந்து, 'துாய்மை எரிசக்தி மற்றும் சுகாதாரப் பயன்பாடுகளுக்கான மேம்பட்ட பொருட்கள்' என்ற தலைப்பில், சர்வதேச மாநாட்டை நடத்தின.
இந்தியா, நார்வே, இலங்கை, தென் கொரியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
பொருட்கள் அறிவியல், துாய்மை எரிசக்தி தொழில்நுட்பங்கள் மற்றும் சுகாதாரப் பயன்பாடுகள் தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து பகிர்ந்து கொண்டனர்.
மாநாட்டில் இந்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மன்றத்தின் இயக்குனர் ஜெனரல் கலைச்செல்வி, மாநாட்டு ஆய்வுக் கட்டுரைகள் தொகுப்பை வெளியிட்டார்.
சி.ஐ.டி., கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் தாளாளர் சந்தோஷ், மேற்கு நார்வே பயன்பாட்டு அறிவியல் பல்கலை பேராசிரியர் குன்னார் யிட்ரி, இயற்பியல் மற்றும் நானோ தொழில்நுட்பத் துறை பேராசிரியர் தயாளன் வேலாயுதப்பிள்ளை, சி.ஐ.டி., முதல்வர் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.