யானை தாக்கி ஒருவர் காயம்
பந்தலுார்: பந்தலுார் அருகே பிதர்காடு ஓடோடம்வயல் பகுதியை சேர்ந்தவர் சுகுமாரன்,52. எலக்ட்ரானிக் பணி செய்து வரும் இவர், நேற்று முன்தினம் இரவு கைவட்டா பகுதியில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு சென்று விட்டு,திரும்பி நடந்து வந்துள்ளார்.
இரவு, 8:00- மணிக்கு சாலையை கடக்க முயன்ற யானை, அந்த வழியாக நடந்து வந்த சுகுமாரனை தாக்கி உள்ளது. அப்போது, அவரது இடது கால் மற்றும் தொடை பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டு அதே இடத்தில் விழுந்துள்ளார்.
தகவல் அறிந்த வனவர் சுதீர்குமார் மற்றும் வனக்குழுவினர் அப்பகுதிக்கு சென்று, காயமடைந்த சுகுமாரனை மீட்டு, மேல் சிகிச்சைக்காக கோழிக்கோடு தனியார் மருத்துவமனை அனுமதித்துள்ளனர். வனத்துறை சார்பில் அதற்கான செலவினங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தகிக்கும் வெயிலில் முன் அறிவிப்பற்ற மின்தடை சாகுபடி பணிகள் பாதிக்கும் அபாயம்
-
டயர் வெடித்து வேன் கவிழ்ந்து 10 பேர் காயம்
-
தொடரும் காலநிலை மாற்றத்தால் கேரட், பீன்ஸ் விலை குறைந்தது
-
தொடரும் மழையால் இலை வரத்து அதிகம் போதிய விலை இல்லாததால் அதிருப்தி
-
ஜெயேந்திர பள்ளி மாணவி தேசிய அளவில் சாதனை
-
குடிசை மாற்று வாரிய அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் கைது
Advertisement
Advertisement