மது விற்பனையில் என்ன மாற்றம் செய்து விட்டனர்? செந்தில் பாலாஜி கேள்வி

34

கோவை: ''மது விற்பனையில் அதிகாரிகளும், அமைச்சர்களும் என்ன மாற்றம் செய்து விட்டனர்,'' என, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை தெற்கு தொகுதியில் வெற்றி பெற்ற இவர், நேற்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து, நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழக அரசு, மக்கள் நலனை கவனிக்காமல், தி.மு.க.,வையே குற்றம் சுமத்தி வருகிறது. அரசு கடமையை செய்யத்தவறும் போது, சுட்டிக்காட்டுவது எதிர்கட்சியின் கடமை. நாங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம். கல்வி, மருத்துவத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தொழில்துறையில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி பெற்றுள்ளது. இதை தாண்டி த.வெ.க., என்ன மாற்றத்தை கொண்டு வரப்போகிறது என்பதை பார்ப்போம்.

சட்டம் - ஒழுங்கு பிரச்னையை தீர்க்க, ஆறு மாதம் பொறுத்திருக்க வேண்டுமா. மின்வெட்டுக்கு தீர்வு காண வேண்டும். வெறும் வசனம் பேசுவதற்கு பதிலாக துறைசார்ந்த பணிகளை கவனிக்கலாம்.

கரூரில், த.வெ.க., தலைவர் விஜய் எவ்வளவு மோசமாக பாட்டு பாடி கேவலப்படுத்தினார். தற்போது, மது விற்பனையில் அதிகாரிகளும், அமைச்சர்களும் என்ன மாற்றத்தை செய்துவிட்டனர்? இது ரீல்ஸ் ஆட்சி. இனியும் 'ரீல்ஸ்' மோகத்தில் தான், அரசும், அமைச்சர்களும் உள்ளனர். மக்களுக்கான ஆட்சி இனியும் துவங்கவில்லை. துவங்குவர் என்ற நம்பிக்கை இல்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement