ஊருக்குள் வராத பஸ்சை சிறைபிடித்த மக்கள்

காரிமங்கலம்; தர்மபுரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சா-லையில் மாட்லாம்பட்டி, பெரியாம்பட்டி, காரி-மங்கலம் வழியாக செல்ல அரசு மற்றும் தனியார் பஸ்களுக்கு அரசு சார்பில், பர்மிட் வழங்கப்பட்-டுள்ளது. ஆனால், அந்த பர்மிட்டை பொருட்படுத்-தாமல் பெரும்பாலான தனியார் பஸ்கள் பைபாஸ் வழியாக சென்று வருகின்றனர்.


இதனால், மேற்கண்ட பகுதிகளில் இருந்து பொது-மக்கள் வெளியூர்களுக்கு சென்று வர தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இரவில் அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் மேற்-கண்ட பகுதிகளுக்கு செல்லாமல், பைபாஸில் பயணிகளை வலுக்கட்டாயமாக இறக்கி விடும் சம்பவம் தொடர்ந்து நடக்கிறது.நேற்று மதியம் கிருஷ்ணகிரியில் இருந்து, தர்ம-புரி மாவட்டம் பெரியாம்பட்டிக்கு சிலர், தனியார் பஸ்சில் வந்தனர். இதில், நான்- ஸ்டாப் முறையில் பஸ் இயக்கப்படுவதால், பெரியாம்-பட்டி ஊருக்குள் செல்லாது என, கூறியதுடன் அவர்களிடம், தர்மபுரி வரை செல்லும் கட்டணம் வசூலித்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த பயணிகள், பஸ் கண்டக்டருடன் வாக்குவா-தத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, தனியார் பஸ்
பெரியாம்பட்டிக்கு வந்தபோது, அப்பகுதி மக்கள் திரண்டு பஸ்சை சிறைபிடித்தனர்.
கண்டக்டர் தரப்பில், எங்களுக்கு நேரம் இருந்தால் மட்டுமே ஊருக்குள் வருவோம். இல்-லையெனில் பைபாஸில் தான் இயக்குவோம். இது குறித்து, அதிகாரிகளுக்கு தெரியும் என கூறி-யதால், வாக்குவாதம் மேலும் அதிகரித்தது. அதைத்தொடர்ந்து, ஊர் முக்கியஸ்தர்கள் சமர-சத்திற்கு பின், பொதுமக்கள் பஸ்சை விடுவித்-தனர். இதனால், அரை மணிநேரம் பெரியாம்பட்டி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதில், ஊருக்குள் வராத தனியார் பஸ்கள் மற்றும் அதற்கு துணை போகும் அதிகாரிகள் மீது, மாவட்ட
நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க, பொது-மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement