இந்திய ஐக்கிய கம்யூ., பேரவை கூட்டம்

தர்மபுரி; இந்திய ஐக்கிய கம்யூ., கட்சியின் தர்மபுரி பேரவை கூட்டம், நல்லம்பள்ளியில் மாவட்ட நிர்-வாகக்குழு உறுப்பினர் மாதையன் தலைமையில் நேற்று நடந்தது.


மாவட்ட செயலாளர் பிரதாபன், பொதுமக்கள் தெரிவித்த பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினார். இதில், த.வெ.க., தேர்தல் அறிக்-கையில் தெரிவித்த வாக்குறுதிகளை நிறை-வேற்ற வேண்டும். தர்மபுரி, -சிப்காட்டில் ஒள் மாவட்டத்தை சேர்ந்த படித்த இளைஞர்கள், பெண்களுக்கு வேலை கிடைக்கும் வகையிலான தொழிற்சாலைகளை துவங்க வேண்டும். நல்-லம்பள்ளி தாலுகாவில் பூதனஹள்ளி, பாளையம், நத்தஹள்ளி, நாகர்கூடல், பங்கு-நத்தம் ஆகிய வருவாய் கிராமங்களில் செயல்-படும் கல்குவாரிகளை முழுமையாக மூட வேண்டும். நல்லம்பள்ளி ஒன்றியத்தில் கண்-ணனுார் - தம்மணம்பட்டி சாலை, சின்னமனுார் - வத்தல்மலை அடிவாரம் வரை உள்ள சாலை, வெங்கடம்பட்டி - வீரிய செட்டிப்பட்டி சாலை, கொத்தமல்லிகாரன் கொட்டாய் சாலை ஆகிய-வற்றை ஆகிய இடங்களில் புதிய தார்ச்சா-லைகள் அமைக்க வேண்டும். 100 நாள் வேலை அட்டை பெற்ற அனைவருக்கும், வேலை வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா-னங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement