அரசு மருத்துவ கல்லுாரிக்கு பெண்ணின் உடல் தானம்

தர்மபுரி; தர்மபுரி மாவட்டம், அரூர் பகுதியை சேர்ந்த பெண்ணின் உடலை, தர்மபுரி அரசு மருத்துவ கல்லுாரி மாணவர்களின் ஆராய்ச்சிக்காக, உற-வினர்கள் நேற்று தானமாக வழங்கினர்.


தர்மபுரி மாவட்டம், அரூர் மேல் பாட்ஷாபேட்-டையை சேர்ந்த விஜயலட்சுமி, 71. இவரது கணவர் மற்றும் மகன் ஏற்கனவே இறந்து விட்ட நிலையில், வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த, 2013ம் ஆண்டு தர்மபுரி அரசு மருத்துவ கல்லுாரி மாணவர்களின் ஆய்வுக்காக, தான் இறந்த பிறகு தன்னுடைய உடலை தானம் செய்ய பதிவு செய்திருந்தார்.இந்நிலையில், வயது முதிர்வின் காரணமாக, விஜயலட்சுமி நேற்று உயிரிழந்தார். இதைய-டுத்து, விஜயலட்சுமியின் உறவினர்கள், அவரு-டைய எண்ணத்தை நிறைவேற்றும் வகையில், இறுதி சடங்குகள் செய்து முடித்தவுடன் உடலை ஆம்புன்ஸ் மூலம், தர்மபுரி அரசு மருத்துவக் கல்-லுாரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அரசு மருத்துவக் கல்லுாரி பேராசியர்கள் பிரபா-வதி, சவுந்தர்யா, மனோகரன் முன்னிலையில், விஜயலட்சுமியின் உடலை ஒப்படைத்தனர்.

Advertisement