ஓசூரில் கன மழையால் மரம் சாய்ந்து 3 கார் சேதம்
ஓசூர்; கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் நேற்று மாலை பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. அதனால், ஓசூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் அவதியடைந்-தனர்.
கதிரேப்பள்ளி பகுதியில் உயர்மின் அழுத்த கம்பம் சாய்ந்ததால், குமுதேப்பள்ளி, திப்பாளம்,
ஆர்.ஆர்.,கார்டன், கதிரேப்பள்ளி உட்பட பல்வேறு பகுதிகளில்,
4 மணி நேரம் தொடர் மின்தடை ஏற்பட்டது. மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
ஓசூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள தனி நிலவரி திட்ட அலுவலகம் முன் நிறுத்தப்பட்டிருந்த, 3 அரசு கார்கள் மீது மரம் சாய்ந்து விழுந்ததில்
சேதமடைந்தன. நேற்று விடுமுறை என்பதால், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் தப்பினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement