5ம் கட்ட நீச்சல் பயிற்சி நிறைவு

தர்மபுரி; தர்மபுரி மாவட்டத்தில் நீச்சல் பயிற்சி முகாம்கள் நிறைவடைந்ததால், முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு நேற்று சான்றிதழ்கள்
வழங்கப்பட்டன.


தர்மபுரி மாவட்ட விளையாட்டரங்கம் கட்டுப்-பாட்டிலுள்ள ராஜாஜி நீச்சல் குளத்தில், கோடை-கால நீச்சல் பயிற்சி முகாம்கள் நடந்து வந்தன. அந்த வகையில், 5ம் கட்ட நீச்சல் பயிற்சி கடந்த, 5ம் தேதி துவங்கிய நிலையில், நேற்று நிறைவ-டைந்தது.இதையடுத்து, பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்கள் வழங்-கப்பட்டன. இதுவரை நடந்த ஐந்து கட்ட நீச்சல் பயிற்சி முகாம்களில் மொத்தம், 326 மாணவ, மாணவியர் பயிற்சி பெற்றதாக,
தர்மபுரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சிவரஞ்சன் தெரி-வித்தார்.

Advertisement