குரோஷியாவை வென்றது பெல்ஜியம் * நட்பு கால்பந்தில் அபாரம்
ரிஜெகா: நட்பு கால்பந்து போட்டியில் பெல்ஜியம் அணி 2-0 என்ற கோல் கணக்கில், குரோஷியாவை வீழ்த்தியது.
'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில், வரும் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை நடக்க உள்ளது. இதற்குத் தயாராகும் வகையில் அனைத்து அணிகளும் 'நட்பு' போட்டிகளில் விளையாடுகின்றன. பெல்ஜியத்தின் ரிஜெகா நகரில் நடந்த போட்டியில் பெல்ஜியம், குரோஷிய அணிகள் மோதின.
போட்டியின் 38 வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் யூரி டையலமன்ஸ் முதல் கோல் அடித்தார். இரண்டாவது பாதியின் 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் ரோமெலு லுகாகு (90+6 வது நிமிடம்) தன் பங்கிற்கு ஒரு கோல் அடிக்க, பெல்ஜியம் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
மொராக்கோ அணி, 4-0 என்ற கணக்கில் மடகாஸ்கர் அணியை வென்றது. மொராக்கோ சார்பில் இஸ்மாயில் சைபரி, 4, 25 வது நிமிடங்களில் என இரண்டு கோல் அடித்தார். மடகாஸ்கர் வீரர் எல் ஹடரி 78 வது நிமிடம் 'ரெட் கார்டு' பெற்று வெளியேறினார். தவிர ரஹிமி (78), எல் காபி (87) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர்.
அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி, 0-4 என ஹைதி அணியிடம் தோல்வியடைந்தது.
மேலும்
-
கிலோ ரூ.8 வரை விலை உயர்ந்த அரிசி: டீசல் விலை உயர்வு எதிரொலி
-
மாணவ, மாணவியர் போதை ஒழிப்பு உறுதி-மொழி
-
பூர்வீக நிலத்தில் வழித்தகராறு அத்தை மகனுக்கு கத்திக்குத்து
-
கூட்டுறவு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி உண்ணாவிரதம்
-
அதிக ஒலி எழுப்பி சென்ற வாகனங்களுக்கு அபராதம்
-
கொள்முதல் நிலையம் அமைக்கக்கோரி தென்னை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்