கிலோ ரூ.8 வரை விலை உயர்ந்த அரிசி: டீசல் விலை உயர்வு எதிரொலி
விருதுநகர்: டீசல் விலை உயர்வால் லாரிகளின் வாடகை கட்டணம் 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதனால் தற்போது வெளிமாநிலங்களில் இருந்து வரும் அரிசிகளின் விலை கிலோவிற்கு ரூ.8 வரை உயர்ந்துள்ளது.
ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா போரினால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை அதிகரித்துள்ளது. போர் நெருக்கடியால் பெட்ரோல், டீசல், காஸ் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நாடு முழுவதும் மே 15 முதல் நான்கு முறை எரிபொருள் விலையை பெட்ரோலிய நிறுவனங்கள் உயர்த்தியது. இதனால் சரக்குகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும் லாரிகளின் வாடகை கட்டணம் 25 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது.
அரிசி வியாபாரிகள் கூறியதாவது: கர்நாடகா, ஆந்திராவில் இருந்து வரும் கர்நாடகா பொன்னி, நெய் கிச்சடி, உள்பட பல்வேறு அரிசி ரகங் களின் விலை உயர்ந்துள்ளது. 10கி., அரிசி பை ரூ.40, 26கி., அரிசி ரூ.150 வரை விலை உயர்ந்துள்ளது.மேலும் சில்லரை விற்பனையில் கிலோவிற்கு ரூ.8 வரை விலை உயர்ந்துள்ளது என்றனர்.
நெல்மூட்டைகளை முறையாக மழையிலிருந்து பாழாகாமல் ஒழுங்காக கிடங்குகளில் சேமித்திருந்தால், அவைகள் வீணாகாமல் இருந்திருந்தால் இந்தவிலையேற்றம் தேவைப்பட்டிருக்காது. மேலும் ஆட்சிக்கு வந்தபின் பெண்களுக்கு இலவசம் என்று பல இலவசங்களை வழங்காமல் இருந்திருந்தால், அவற்றை ஈடுசெய்ய இப்படி விலையேற்றம் செய்யவேண்டியது இருந்திருக்காது.
கச்சா எண்ணை விலை சரிந்துள்ளதே, அப்படி இருந்தும் அம்பானி ஏழை ஆகக் கூடாது என்று பெட்ரோல் டீசல் விலையை குறைக்க ஒன்றிய அரசுக்கு மனசு வரலியா? சவுக்கிதார் இப்போ சந்தா சோர், மக்கள் பாக்கெட் சோர் ஆயிட்டாரா? எதிர்கட்சி எம்.எல்.ஏ, எம்.பிக்களை வாங்குறதுக்கு பணம் சேர்க்கிறாரா?
உணவு பொருட்களான அரிசி கோதுமை காய்கறிகளின் விலையை ஒருபோதும் ஏறாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். ஆடம்பரப்பொருட்களின் விலை உயர்ந்தால் பரவாயில்லை.
ஒரு லிட்டருக்கு 3 ரூபாய் உயர்ந்தால் அரிசி கிலோவுக்கு 8 ரூபாய் உயர்வு என்னய்யா நியாயம் நீங்க கூண்டோடு எரிநரகம் போவது உறுதி
அரிசி வியாபாரி திருடர்களா? திமுக ஆட்சியில் இருந்த போது இரு முறை பெட்ரோல் டீசல் கலால் வரியை மத்திய அரசு குறித்துள்ளது. கேடுகெட்ட திமுக அரசு அந்த வரி குறைப்பை மக்களுக்கு கொடுக்கவில்லை. மத்திய அரசு கலால் வரியை குறைப்பதற்கு முன் இருந்த விலை தான் இப்போது உள்ளது. ஆனால் மத்திய அரசு கலால் வரியை குறைப்பதற்கு முன் அரிசி விலை குறைவாகவே தானே இருந்தது. மேலும் பெட்ரோல் டீசல் விலையை ஏற்றுவதற்கு முன்பே சிறிது சிறிதாக விலையை ஏற்றி விட்டார்கள் இந்த கேடுகெட்ட மக்கள்விரோத கொள்ளைக்கார வியாபாரிகள். உண்மையாக விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைப்பதில்லை. நடுவில் இந்த கேடுகெட்ட மக்கள்விரோத கொள்ளைக்கார வியாபாரிகள் தான் கொள்ளையடிக்கிறார்கள். அரசு அரிசியின் விலையை தற்போது உள்ள சந்தைக்கேற்ப நிர்ணயம் செய்ய வேண்டும். கொள்ளைக்கார அரிசி வியாபாரிகள் கொள்ளையடிப்பதை தடுக்க வேண்டும்.
டீஸல் விலை உயர்ந்தால் அமெரிக்கா இரான் போர் காரணம். அரிசி விலை உயர்ந்தால் மாநில அரசு காரணம். வெளிநாடு போய் மெடல் வாங்கிட்டு வர்றவர் காரணம் இல்லை.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அமெரிக்கா டாலருக்கு 76 ஆக குறைந்து உள்ளது ஆனால் இங்கு உள்ள ஆட்சியாளர்கள் கப் சிப். ஒரு டாலர் கூடினால் உடனே நாள் ஒன்றுக்கு எண்ணெய் நிறுவனங்களுக்கு 600 கோடி 700 கோடி என்று கூப்பாடு போடுவார்கள் இத்தனைக்கும் 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் தான்
கோகுல எப்போதும் தலைப்புக்கும் கருத்துக்கும் சம்பந்தம் இல்லாமல் கருத்து போடுவாய் ..பாதி மூளை வேலை
gokula.. சீன சப்பான் இங்கு எல்லாம் பெட்ரோல்.விலை அதிகம்தான்....
முரட்டு முட்டு 2029 வரை மட்டுமே உங்கள் ஆட்டம் ...பிறகு இருக்கு
கொத்தடிமை நாதஸ் இனி காலமெல்லாம் இதே புலம்பல்தான்
2031 வரை முக்கினாலும் நடக்காது
அம்பானி பாவம். அவரால் அரிசி வாங்கமுடியாதே. அதனால டீசல் விலையை இன்னும் 10 ரூ வேண்டுமானால் ஏற்றி விடலாம்.
அதெப்படி டீசல் ரூ3 உயர்ந்தபிறகு ரூ8 உயர்த்தப்பட்டது. இதுதான் பகல் கொள்ளை. நாளை 10ரூ டீசல் விலை குறைந்தால் அரிசி விலையை குறைப்பார்களா அப்போது வேறு காரணம் கூறுவார்கள். இதுதான் பல காலமாக நடந்து வருகிறது.
சரித்தித்தில் உயர்த்தப்பட்ட டீசல் விலை எப்போது குறைக்கப்பட்டிருக்குன்னு கண்டுபிடிச்சு சொல்லேன்.
டீசல் விலை ஏற்றம் லாரி வாடகை ஏற்றம் இல்லை,
ஆனால் எல்லா பொருட்களும் விலை ஏற்றம்
" லாபத்தில் நடத்தல் தொழில்
கொள்ளை லாபத்தில் நடந்தால் கொள்ளை".
இன்னமும் நெல் மழையில் நனைந்து வீணாகிறது ..வெளி மாநிலங்களிலிருந்து அரிசி வாங்குவது எந்த விதத்தில் நியாயம்மேலும்
-
மஞ்சுவிரட்டு
-
18ம் கால்வாய் சீரமைப்பு பணிகளை வேகப்படுத்துங்கள்: நீர் திறப்புக்கு முன் பணிகளை விரைந்து முடிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
ஹிந்து முன்னணி கூட்டம்
-
இந்தியர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம்; அமெரிக்க துாதர் செர்ஜியோ கோர் விருப்பம்
-
ஒலிம்பிக் தினவிழா
-
நீலகிரியில் ஹவுசிங் போர்டில் குடியிருப்போருக்கு... நோட்டீஸ் வினியோகம்!அபாய கட்டடங்களை இடிக்க அரசு நடவடிக்கை