பூர்வீக நிலத்தில் வழித்தகராறு அத்தை மகனுக்கு கத்திக்குத்து
ஊத்தங்கரை; கல்குமாரம்பட்டியில், பூர்வீக நிலத்தகராறில், அத்தை மகனை கத்தியால் கொடூரமாக வெட்டி-யவர் போலீசில் சரணடைந்தார்.
கிருஷ்ணகிரி மாவட் டம், ஊத்தங்கரை அருகே கல்குமாரம்பட்டியை சேர்ந்த விவசாயி ராஜா, 45. இவரின் தாய்மாமன் மகன் பெரியசாமி, 55. இரு-வருக்கும் நீண்ட நாட்களாக, பூர்வீக நிலத்தில் வழித்தடம் தொடர்பான தகராறு இருந்து வந்தது. நேற்று ராஜா தனக்கு சொந்தமான நிலத்தை விற்-றுள்ளார். மாலை, 5:30 மணிக்கு வீட்டின் அருகே உள்ள பெட்டிக்கடைக்கு சென்ற ராஜாவை, பின்-தொடர்ந்து சென்ற பெரியசாமி, பெட்டிக்கடை முன் ராஜாவை, கத்தியால் சரமாரியாக வெட்-டினார். இதில், ராஜாவின் முகம், கை மற்றும் கழுத்து பகுதிகளில் பலத்த வெட்டுக்காயங்கள் விழுந்து, அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, 108 ஆம்பு-லன்சில் ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கும் பின், மேல்சிகிச்சைக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்-துவக் கல்லுாரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். ராஜாவை கத்தியால் வெட்டி விட்டு தப்பியோ-டிய பெரியசாமி, சாமல்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் நேற்று மாலை சரணடைந்தார். போலீசார் அவரை கைது செய்து விசாரிக்கின்-றனர்.
மேலும்
-
வேளாண் பொருட்கள் சந்தை நிலவரம் (23.6.2026)
-
மின்சார டூ - வீலர் ஆலையை ஈர்க்க தமிழக அரசு பேச்சு 'கிரெட்' நிறுவனத்தை 'மெட்டா' வளைக்க நினைப்பது ஏன்?
-
மின்சார இருசக்கர வாகன ஆலை தமிழகத்துக்கு ஈர்க்க அரசு பேச்சு
-
பி.எஸ்.எல்.வி., தொழில்நுட்பம் தனியாருடன் பகிர ஆலோசனை
-
இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த பேச்சு
-
ரூ.211 கோடிக்கு வீடு வாங்கிய 'பிரஷ்வொர்க்ஸ்' நிறுவனர்