கூட்டுறவு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி உண்ணாவிரதம்

அரூர்; சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள், கூட்டுறவு வங்-கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும். 5 ஏக்கருக்கும் மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு, 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும்' என, த.வெ.க., தலைவர் விஜய் வாக்குறுதி அளித்தார்.
தேர்தலில் வெற்றி பெற்று விஜய் முதல்வரான நிலையில், கடந்த, 25ல் அவர், பயிர்க்கடன் தள்ளு-படி செய்து அறிவிப்பு வெளியிட்டார்.


அவரது அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் மிகப் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இந்நி-லையில், முதல்வர் விஜய் அறிவித்த தேர்தல் வாக்குறுதிப்படி, கடன் தள்ளுபடி அறிவிக்க வேண்டும், என வலியுறுத்தி, தர்மபுரி மாவட்டம், அரூர் தாலுகா அலுவலகம் எதிரில், தமிழக விவ-சாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், நேற்று அடையாள உண்ணாவிரத போராட்டம் நடந்தது.தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜகு-மாரன் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், மொரப்பூர் நிலத்தடி நீர் மேம்-பாட்டு விவசாய சங்கத்தலைவர் ஜெயபால் உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்கங்களின் பிர-திநிதிகள் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி பேசினர். இதில், 100க்கும் மேற்-பட்டோர் பங்கேற்றனர்.

Advertisement