கொள்முதல் நிலையம் அமைக்கக்கோரி தென்னை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி; தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில், தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே, கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்க மாவட்ட தலைவர் எல்லப்பன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பொன்னுசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செய-லாளர் அர்சுனன், பொருளாளர் வஞ்சி உட்பட பலர் கோரிக்கைகள் குறித்து பேசினர்.


தேங்காய் ஒரு கிலோவுக்கு, 60 ரூபாய், உரிக்காத தேங்காய் கிலோ ஒன்றுக்கு, 30 ரூபாய். கொப்பரை ஒரு கிலோ, 180 ரூபாய் என விலை நிர்ணயம் செய்ய வேண்டும். தென்னையை தாக்கும் வெள்ளை ஈ, வாடல் நோய், வேர்ப்புழு, கருவண்டு புழு, ஊசி புழு ஆகிய பூச்சிகளின் தாக்குதலை கட்-டுப்படுத்த, அரசு உதவி செய்ய வேண்டும். நோய்களை கட்டுப்படுத்த, அரசு வேளாண் விஞ்ஞானிகளின் மூலம் தகுந்த மருந்து கண்டு-பிடிக்க, தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தேங்காய், தேங்காய் எண்ணெயை, தமிழக அரசு கொள்முதல் செய்து, ரேஷன் கடை மூலம் மக்களுக்கு வழங்க வேண்டும்.
தர்மபுரி மாவட்டத்தில் தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

Advertisement