சிபிஎஸ்இ பிளஸ் 2 புத்தகத்தில் சீன ஆக்கிரமிப்பு குறித்த பாடம்
- நமது நிருபர் -
பிளஸ் 2 வகுப்புக்கான பாடப்புத்தகத்தில், சீன ஆக்கிரமிப்பு குறித்த பாடம் சேர்க்கப்பட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ., எனும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்துக்கான புத்தகங்கள் மற்றும் பயிற்சிகளை, என்.சி.இ.ஆர்.டி., எனும் தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி பயிற்சி குழு வழங்குகிறது.
சமீப காலமாக, வெளிநாடுகளுடனான உறவு, போர்கள் பற்றிய தகவல்கள், பாடப் புத்தகங்களில் சேர்க்கப்பட்டு வருகின்றன. இதன்படி, தற்போது பிளஸ் 2 அரசியல் அறிவியல் பாட புத்தகத்தில், சமகால உலக அரசியல் போக்கு என்ற பாடத்தில், 'ஆசாத் பாகிஸ்தான் என்பது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு - காஷ்மீர் என்றும், அது, பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள இந்திய பகுதி' என்றும் மாற்றப்பட்டுள்ளது.
மேலும், 'பெரும்பாலான மாநிலங்களுக்கு சமமான அதிகாரங்கள் இருந்தாலும், ஜம்மு -- காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் போன்ற சில மாநிலங்களுக்கு சிறப்பு விதிகள் உள்ளன. இருந்தாலும், ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு விதிகளுடன் இருந்த, 370வது சட்டப்பிரிவு, 2019, ஆகஸ்ட்டில், ஜனாதிபதியால் ரத்து செய்யப்பட்டது' என கூறப்பட்டுள்ளது.
மேலும், காஷ்மீருக்கான 370வது பிரிவு நீக்கம் பற்றியும் விளக்கப்பட்டு உள்ளது. இந்திய- சீன உறவுகள் பற்றிய பாடத்தில், 'இந்திய - சீனா எல்லை தொடர்பான பேச்சில், இந்திய எல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்பால் நம்பிக்கை சிதைந்தது' என, குறிப்பிடப்பட்டு உள்ளது.
அதேபோல், குஜராத் கலவரம், அவசர நிலை கால சர்ச்சைகள், காந்தி படுகொலை உள்ளிட்ட பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன. மேலும், பாபர் மசூதி மூன்று குவிமாட கட்டடம் என்றும், அயோத்தி பிரச்னை சுமுகமாக தீர்க்கப்பட்டதாகவும் பாடத்தில் விளக்கப்பட்டு உள்ளது.
பெருச்சாளி கம்யூனிஸ்டுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்களே. பெரியாரின் அத்தனை சொத்துக்களையம் ஆட்டைய போட்ட வீரமணி பற்றியும் தகவல் இருக்கணும்
திருட்டு த்ரவிஷ கும்பல் பற்றியும் வரும் காலத்தில் பாட புத்தகங்களில் சேர்க்கலாம்
யாருடைய ஆட்சியில் இந்தியப் பகுதிகளை சீனா ஆக்ரமிப்பு செய்தது என்ற உண்மையை சொல்வார்களா?
very much satisfied...very much happy...as a father who taught my CBSE son 8 years back...I know how painfull it was to read leftist history...a lot of changes to bring out !! lots of facts to be disclosed keep it up
தப்பில்லையே ..... சர்க்கரை என்ன ஆச்சு ? எறும்பு திண்ணிருச்சு .... சரி ... கோணிப்பையெல்லாம் என்ன ஆச்சு ? கரையான் திண்ணிருச்சு .... இப்படிப்பட்ட கொள்ளையர்களே பாடங்களில் இடம்பெறும்போது ????
வெரி குட். இன்னும் சேர்க்கப்பட வேண்டியவை முகலாயர்களின் கொடூரங்கள் கத்தி முனையில் மதம் மாற்றப்பட்டது, பாரதத்தில் பல்லேடியம் பல்லாயிரம் கோயில்கள் இடிக்கப்பட்டது மற்றும் சிதைக்கப்பட்டது , இப்படி பல இன்னும் மீதம் உள்ளது. அன்று கத்தி முனையில் மதம் மாற்றப்பட்டவர்கள் இன்று தங்களை ஒரிஜினல் அரேபியர்கள் போல பாவ்லா காட்டுவது ..
பாபர் மசூதி முசுலிம்கள் தாக்குதலில் ப தான் உடைந்து விழுந்தது என்றும் அதை காப்பாற்ற அத்வானி வாஜ்பாய் தலைமையில் பிஜேபி கட்சியினர் முயன்றனர் என்றும் அதனால் தான் வாஜ்பாய் & அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கப் பட்டது என்பதையும் சேர்த்து இருக்கலாம்
அஞ்ஞாயான மட சாம்பிராணிமேலும்
-
பயன்பாட்டில் இருக்கும் 36 ரபேல் விமானங்கள்; பாகிஸ்தானின் பொய் மீண்டும் அம்பலம்
-
எங்களுக்கு இதெல்லாம் தெரியாது; பட்டியல் வாசித்த முதல்வர் விஜய்
-
'எங்கப்பா... உங்க அப்பாவை காணோம்!'
-
திமுக ஆட்சியில் வெளியிட்ட 500 மின்சார பஸ் கொள்முதல் டெண்டர்; ரத்து செய்தது தவெக அரசு
-
இந்தியா உடனான முக்கிய வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டம்; அமெரிக்கா தகவல்
-
இறைச்சி கழிவை மீண்டும் வெள்ளலூரில் கொட்ட முடிவு