இந்தியா உடனான முக்கிய வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டம்; அமெரிக்கா தகவல்

வாஷிங்டன்: இந்தியா உடனான முக்கிய வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது என அமெரிக்கா தகவல் தெரிவித்து உள்ளது.

அமெரிக்கா - இந்தியா இடையே வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது. இதற்கான பேச்சில், இரு தரப்பும் மும்முரம் காட்டி வருகின்றன. இது குறித்து அமெரிக்க வெளியுறவு துறையின் தெற்காசிய பிரிவு துணைச் செயலாளர் பெத்தானி மாரிசன் நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது: இந்தியாவுடனான வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு அமெரிக்கா மிகவும், மிகவும் நெருக்கமாக உள்ளது.

தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த ஒப்பந்தம், 140 கோடி மக்களைக் கொண்ட இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு தரப்பினருக்கும் நன்மை பயக்கும். 2030க்குள் 500 பில்லியன் டாலர் வர்த்தகம் என்ற இலக்கை நோக்கி செயல்பட்டு வருகிறோம்.இந்த ஒப்பந்தத்தை விரைவில் முடிப்போம். அமெரிக்காவில் இந்திய முதலீடும் வளர்ந்து வருகிறது. இவ்வாறு பெத்தானி மோரிசன் பேசினார்.

Advertisement