எங்களுக்கு இதெல்லாம் தெரியாது; பட்டியல் வாசித்த முதல்வர் விஜய்
நமது நிருபர்
''த.வெ.க., அமைச்சர்களுக்கு ஊழல் செய்ய தெரியாது; கோவில் பணத்தை கொள்ளையடிக்க தெரியாது,'' என, முதல்வர் விஜய் பேசினார்.
சட்டசபையில், முதல்வர் விஜய் பேசியதாவது: முந்தைய ஆட்சிகளில், தமிழகத்தின் கருவூலம் திசைமாறி, உருமாறி சென்றுள்ளது. நிதி நிலைமையை மோசமாக்கி சென்று விட்டனர். இதற்காக, தமிழகத்தின் நிதி நிலைமை குறித்து, வெள்ளை அறிக்கை வெளியிட்டோம்.
கொள்ளையடிக்க மாட்டோம்
இதுகுறித்து சொன்னால், எங்களுக்கு ஆட்சி செய்ய தெரியாது. த.வெ.க., அமைச்சர்களுக்கும், எம்.எல்.ஏ.,க்களுக்கும் ஒன்றும் தெரியாது என்கின்றனர். மக்கள் பணி செய்ய தெரிந்த அளவிற்கு மக்கள் பணத்தை எங்களுக்கு சுருட்ட தெரியாது.
டெண்டர்களை முறைப் படுத்த தெரிந்த அளவிற்கு, அதன் ரேட்டை உயர்த்தி, ஊழல் செய்ய தெரியாது. பணியிடமாற்றம், பதவி உயர்வுக்கு பணம் பறிக்க தெரியாது. புதிய பணியிடங்கள் உருவாக்க தெரியும்; அதை விற்க தெரியாது. கோவில்களில் நிர்வாக சீர்கேட்டை தடுக்க தெரியுமே தவிர, கோவில் பணத்தை கொள்ளையடிக்க தெரியாது; அதை தாரைவார்க்க தெரியாது. அரசு வருமானத்தை தனிப்பட்ட கஜானாவுக்கு மடைமாற்ற தெரியாது.
போதை கலாசாரத்தை வளர்க்க தெரியாது; பெண்களை மதிக்க தெரியும். 'ஓசி பஸ், ஆயிரம் ரூபாய் கேஸ்' என்று பேச தெரியாது. மக்கள் சேவை செய்ய தெரிந்த அளவிற்கு சுயநல சேவை செய்ய தெரியாது.
முறைகேடு எப்படி செய்வது என்பதை, நாங்கள் தெரிந்து கொள்ளப் போவது இல்லை; தெரிந்து கொள்ளவும் ஆசைப்படவில்லை. கடைசி வரைக்கும் அது தெரியாமல் இருந்து விட்டு போகட்டும். பல்வேறு விதமான நிதி நெருக்கடியை எங்களுக்கும், மக்களுக்கும் பரிசாக கொடுத்து விட்டு சென்றுள்ளனர்.
மின் தடை நீக்க குழு
இந்த நிதி நெருக்கடியிலும், 5,932 கோடி ரூபாய் அளவிற்கு விவசாய கூட்டுறவு கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளன. மின் தடையை நீக்க, 10 உயர்மட்ட கண்காணிப்பு குழுக்கள், 125 மின் தடை ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கப் படுகிறது. புதிதாக, 77 மின் தடை நீக்க மையம் அமைக்கப்பட உள்ளன. விரைவில் மின் தடை முழுமையாக சரி செய்யப்படும். இவ்வாறு முதல்வர் பேசினார்.
மன்னராட்சி கிடையாது மனசாட்சியுள்ள மக்களாட்சி'
''இது மன்னராட்சி கிடையாது; மனசாட்சியுள்ள மக்களாட்சி. கேள்வி கேட்கவும், விமர்சனம் செய்யவும் அனைவருக்கும் உரிமை உண்டு,'' என, முதல்வர் விஜய் பேசினார். சட்டசபையில், முதல்வர் பேசியதாவது: சட்டம் -- ஒழுங்கு சரியாக இருக்க வேண்டும் என்பதில், மாற்று கருத்து கிடையாது. பெண்கள் பாதிக்கப்படுவதை யாராலும் சகித்துக்கொள்ள முடியாது. சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த பிரச்னை எல்லாம், மே, 10ம் தேதிக்கு பின் வரவில்லை. பல ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் விடப்பட்டதால் ஏற்படும் பிரச்னை. இதுபற்றி எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புவது அக்கறையாக தெரியவில்லை; அவதுாறு அரசியலாகவே தெரிகிறது. கடந்த ஒன்பது மாதங்களாக, தமிழகத்தில் சட்டம் -- ஒழுங்கு டி.ஜி.பி., நியமிக்கப்படவில்லை.அதை கேட்டு கேட்டு ஓய்ந்து போய் விட்டோம். கடந்த ஆட்சியில் நடந்த பிரச்னைகளுக்கு, இப்போது எங்கள் ஆட்சியில் விடை கண்டுபிடிக்கிறோம். போதைப்பொருள் நடமாட்டம் தாறுமாக கொட்டி கிடக்கிறது.
முந்தைய ஆட்சியில், போலீஸ் துறை யார் கையில் இருந்தது. ஆரம்ப நிலையிலேயே, இந்த பிரச்னைகளை ஏன் கட்டுப்படுத்தவில்லை? மனசாட்சி உள்ளவர்களுக்கு இந்த பிரச்னை குறித்தும், என்ன நடக்கிறது என்றும் தெரியும். இதுபற்றி யார் வேண்டுமானாலும், என்னிடம் கேள்வி கேட்கலாம்.
இது மன்னராட்சி கிடையாது; மனசாட்சியுள்ள மக்களாட்சி. கேள்வி கேட்கவும், விமர்சனம் செய்யவும் அனைவருக்கும் உரிமை உண்டு. எனவே, நடுநிலையோடு இந்த பிரச்னை குறித்து பேசினால், நன்றாக இருக்கும். சட்டம் -- ஒழுங்கு பிரச்னை, மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகள் குறித்து பேசினால், அதை காது கொடுத்து கேட்பதற்கு, இந்த அரசு தயாராக உள்ளது. இவ்வாறு விஜய் பேசினார்.
@block_G@
சட்டசபையில் முதல்வர் விஜய் மேலும் பேசியதாவது:
'சட்டசபையில் கவர்னர் உரை வாசித்தபோது, இரண்டு முறை தேசிய கீதம் பாடியது தவறு. இதற்கு முன், அப்படி சட்டசபையில் நடந்தது இல்லை.
அந்த மரபை மாற்றி விட்டீர்கள்' என, போர் மாதிரி எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்டன.
கடந்த, 2021 ஆகஸ்ட் 2ம் தேதி, சட்டசபை நுாற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வர் கரு ணாநிதி படம் திறப்பு விழா நடந்தது. ஜனாதிபதி பங்கேற்ற அந்த விழாவில், தேசிய கீதத்திற்கு பின், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் என்று குறிப்பிடப் பட்டு இருந்தது.
தேசிய கீதம் இரண்டாவதாகத் தான் பாடப்பட்டது.
இதைப்பற்றி கேட்டால், அது ஜனாதிபதி பங் கேற்ற நிகழ்ச்சி என்பர். இவர்கள் பேசுவது ஒன்று; செய்வது ஒன்று. மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றனர். விஜயையும், சாமானியர்கள், சமூக நீதி அரசையும் அவமானம் செய்வதற்கு, அரசியலில், 'சீனியாரிட்டி'யை பயன்படுத்துகின்றனர்.
மாநில உரிமை, மொழி உரிமை, பண்பாடு, கலாசாரம் எனக்கூறி, இரட்டை வேடம் போடு கின்றனர். எதிர்க்கட்சி தலைவர் பேசும் போது, இந்த அரசை குறிப்பிடுவதற்கு, 'ஈவில்' அதாவது தீமை என்ற வார்த்தையை பயன்படுத்தினார். இந்த அரசை பற்றி, 'டெவில்ஸ்' அதாவது பேய்கள் பேசக்கூடாது.
இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.
block_G
உன் வாயை மூடு.
அனைத்து கோவில்களிலும் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது.
1000 ரூபாய் கொடுத்தால் நேராக கருவறை வரை கொண்டு சென்று காட்டுகின்றனர்.
ராமேஸ்வரம் கோவிலில் தீர்த்தங்களில் நீராட கோவில் ஊழியர்கள் மூலம் லஞ்சம் விளையாடுகிறது. அவர்கள் அதிகப்படி காசு வாங்கி கொண்டு நேராக பக்தர்களை கூடி கொண்டு தீர்த்தம் ஊற்றி விடுகிறார்கள். தயவு செய்து இதையும் ஒழிக்கவும்.
இன்றைய முதல்வர் நேற்று சினிமாவில் நடிக்கும் போது அனைத்து படங்களிலும் தன் சம்பளம் முழுவதும் வெள்ளையாக மட்டுமே வாங்கியதை உறுதி செய்ய முடியுமா? ரஜினியே பகுதி சம்பளத்தை கருப்பு பணமாக வாங்கியதை ஒப்புக் கொண்டார் மேலும் தன் படத்தில் குடிப்பது மற்றும் ஆபாச காட்சிகள் அறவே இல்லை என்று சத்தியம் செய்ய முடியுமா? விஜயே நினைக்கவில்லை தான் முதல்வராக வருவோம் என்று இதனால்தான் சும்மா வாயில் நல்லா வந்ததை தேர்தல் வாக்குறுதிகள் தாய்மாமன் சீர், ₹2500 மகளிர் உரிமை தொகை, வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், அது இது என அடித்து விட்டார் இது விசய்க்கு திடீரென அடித்த அதிர்ஷ்ட லாட்டரி சோசப்பே எதிர்பார்க்கவில்லை ஊழல் செய்யவே மாட்டோம் என்று நாட்டில் எந்தவொரு கட்சியாவது தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளதா? ஆக நான் பல நாட்களாக பதிவிட்டதைப் போல நாட்டில் எந்தவொரு கட்சியும் யோக்கியம் கிடையாது திருடி திண்பதற்கென்றே அரசியலுக்கு வருகிறானுகள் நல்லவனுக்கு அரசியலில் எந்தவொரு வேலையும் கிடையாது நாட்டில் உயர்ந்த பதவியில் இருந்து வார்டு உறுப்பினர் வரை எவனும் யோக்கியன் கிடையாது ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு ஏதோ சில ஊழல்களை அடையாளம் கண்டுள்ளார் ஊழல் நடக்காமல் நேர்மையான ஆட்சி செய்தால் கண்டிப்பாக நாட்டில் விலைவாசி குறைந்து அரசு கஜானாவில் பணம் ஆதிகமாக இருக்க வேண்டும் இன்னும் ஒரு வருடம் கழித்து பார்ப்போம் இந்த ஆட்சி எப்படி நேர்மையாக உள்ளது என்று ஆனால் திருடி திண்பதையே தொழிலாக கொண்ட அரசியல்வாதிகள் கும்பல்தான் நாட்டில் காலத்துக்கும் யோக்கியன் வேஷம் போட்டு ஆட்சி செய்துள்ளானுகள் ஆனால் விசய் இன்னும் சினிமா உலகத்திலிருந்து வெளியே வரவில்லை சட்டசபையிலாவது வாய் திறந்து கண்ணியமாக பேச கற்றுக் கொள்ள வேண்டும் ரீல்ஸ் எடுத்து போடுவதை நிறுத்திவிட்டு மக்களுக்கு நல்லது செய்ய முயற்சிக்க வேண்டும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் உடனே சரி செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் தேர்தல் வாக்குறுதிகள் இமயமலை போல குவிந்துள்ளது அதற்கு வேண்டுமானால் சிறிது காலம் அவகாசம் தரலாம் நேர்மையான வெளிப்படையான ஆட்சியை எதிர்பார்க்கிறோம் இந்த அரசு மக்களை எப்படி நடத்துகிறது என பார்ப்போம்
ஊழலை அழியுங்கள் பாராட்டுக்கள். அதே சமயத்தில் ஹிந்து கோவில்களின் வரும் வருமானம் பல ஆயிரம் கோடி. கிராம கோவிலில்களின் உள்ள ஏழை பூசாரிக்கும் மற்ற அனைத்து சமூக ஊழியர்களுக்கும் சம்பளமா கொடுப்பது பிச்சை காசு. அதிலே அவன் அரிசி கூட வாங்க முடியாது. அறமில்லா துறை ஊழியர்கள் போலி டிக்கெட் மூலம் சம்பாதிப்பது பல லக்ஷம் கோடி ரூபாய். அதிலே கட்சி மேல் இடம் வரை பங்கு. வெட்க கேடு.
இந்த லக்ஷணத்தில் மற்ற சமூகத்தில் உள்ள பூசாரிக்கு பைக்கு வாங்க இலவசமா பல ஆயிரமா? என்னையா போலி செகுலரிஸ்ம்? யாரை ஏமாற்றும் வேலை இது?
ஊழலற்ற மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை நோக்கிய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் இந்தத் துணிச்சலான பேச்சு பாராட்டுக்குரியது. மக்கள் பணத்தையும் ஆன்மீகச் சொத்துக்களையும் நேர்மையாகப் பாதுகாப்போம் என்ற அவரது உறுதிமொழி, தமிழக அரசியலில் ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது
வாயில் பொய்யை தவிர எதுவும் பேச தெரியாது பிறந்தநாள் கொண்டாடி விட்டு தளித ஒழுக்கம் பற்றி பேச தெரியும்
ஆண்ட குடும்பத்தின் படங்களில் நடித்த போது அந்த சம்பளம் பார்ட்டி பண்டாக இருக்கலாம்னு தோன்றவில்லை இப்போது திடீரென்று எப்படி..
ஹிந்து சம்பிரதாயங்களை ஒடுக்க திருப்பரங்குன்ற வழக்கில் மேல்முறையீடு செய்யத்தெரியும் ... அது எஜமான கிட்டினி திருட்டு கட்சியின் உத்தரவு ....
717 மதுக்கடைகளை மூடிய பின் விற்பனையில் என்ன மாற்றம் நிகழ்ந்துள்ளது ? எத்தனை சதவிகிதம் விற்பனை குறைந்தது ? பத்துரூபாய் இப்போ இருபது முப்பது என்று யாருக்கு செல்கிறது ? வழிகாட்டு மதிப்பீடு குறைவு என்று சொல்லும் இந்த அரசு பத்திர பதிவை குறைந்த விலையில் இன்னமும் பதிவு செய்வதை நிறுத்தாமல் தொடர்வது என் ? புதிய வழிகாட்டு மதிப்பு நிர்ணயம் செய்வது வரை பத்திர பதிவை நிறுத்தி வைக்கலாம் அல்லது ப்ரொவிஷனல் பத்திர பதிவு செய்து இழப்பீட்டை தடுத்து நிறுத்தலாமே
மசூதி பள்ளிவாசல் இஸ்லாமிய பூசாரிகளுக்கு பைக் வாங்க அரசு நிதியில் இருந்து 50 ஆயிரம் குடுக்கிறிங்க... அதே மாதிரி எங்க மாரியம்மன் காளியம்மன் கோவில் பூசாரிகளுக்கும் பைக் வாங்க 50 ஆயிரம் ரூபாய் குடுப்பிங்களா ஆபிஸர்.?.....