இறைச்சி கழிவை மீண்டும் வெள்ளலூரில் கொட்ட முடிவு

வெள்ளலூர்: வெள்ளலுார் குப்பைக்கிடங்கில் கொட்டப்படும் இறைச்சிக்கழிவால் மகாலிங்கபுரம், கோணவாய்க்கால்பாளையம், ஸ்ரீராம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான துர்நாற்றம், சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக, குறிச்சி,- வெள்ளலூர் மாசு தடுப்பு கூட்டுக்குழு புகாரளித்தது. இதனால் வெள்ளலூரில் இறைச்சிக்கழிவு கொட்ட, மாநகராட்சி கமிஷனர் ரவி தேஜா தடை விதித்தார்.

இதன்படி 4 நாட்களாக இறைச்சி கழிவு கொட்டப்படுவதில்லை. கழிவு ஏற்றி வந்த வாகனங்களும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில் இறைச்சி கழிவு கொட்டுவதற்கு மாநகராட்சி மாற்று இடம் ஒதுக்காததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

26வது வார்டு ம.தி.மு.க. கவுன்சிலர் சித்ரா கூறுகையில், மாநகராட்சி நிர்வாகம், அந்தந்த பகுதிகளில் குழி தோண்டி இறைச்சி கழிவு புதைக்க சொல்கிறது. இடம் இல்லாததால் மக்கள் ஆங்காங்கே வீசி செல்கிறார்கள். நாய், பூனை, பெருச்சாளி போன்றவை தெருக்களில் இழுத்து போட்டு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகின்றன. நோய் பரவும் அபாயம் உள்ளதால், உடனடியாக இறைச்சி கழிவை அகற்ற வேண்டும் என்றார்.

@block_B@

மைசூருக்கு அனுப்ப திட்டம்

''வெள்ளலூரில் புகார் வந்ததால் அங்கு இறைச்சி கொட்ட தடை விதித்தோம். மாற்று இடம் குறித்த புகார்கள் வருவதால் கழிவை மீண்டும் வெள்ளலூரிலேயே கொட்ட சொல்லியுள்ளோம். இறைச்சி கழிவு அந்தந்த மண்டலங்களில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் தேக்கப்படும். அங்கிருந்து உரம் தயாரிக்கவும் கால்நடை தீவனத்துக்கும் மைசூர் அனுப்பப்படும். அடுத்த சில நாட்களில் இடத்தை தேர்வு செய்து வெள்ளலூரில் இறைச்சி கழிவு கொட்ட தடை விதிக்கப்படும்,'' என்கிறார் கமிஷனர் ரவி தேஜா.block_B

Advertisement