'எங்கப்பா... உங்க அப்பாவை காணோம்!'

11

சட்டசபையில், முதல்வர் விஜய் நேற்று சொன்ன குட்டி கதை: வெளியில் கண்ணுக்கு மேல் கை வைத்தபடி, ஒரு முதியவர் தேடிக்கொண்டிருந்தார். அவரிடம் சென்ற ஒரு சின்ன பையன், 'என்ன தேடுகிறீர்கள்' என்று கேட்டான். அதற்கு அந்த முதியவர், 'தம்பி உங்க அப்பா இங்க தான் இருப்பார்; இப்போ உங்க அப்பாவை காணோம்' என்றார்.

எங்களுக்கும் இப்படி நக்கலாக, நையாண்டியாக பேச தெரியும். நான் சொன்ன கதையில் தான், அந்த முதியவர் அப்படி கேட்டாராம். இதற்காக யாரும் 'டென்ஷன்' ஆக வேண்டாம். ஐந்து நிமிடம் பேசியதற்கே, கொளத்துார் இந்த ஆட்டம் ஆடியது. பேசு பேசு என்றால் என்ன பேசுவது? இவ்வாறு விஜய் கூறினார்.

Advertisement