திமுக ஆட்சியில் வெளியிட்ட 500 மின்சார பஸ் கொள்முதல் டெண்டர்; ரத்து செய்தது தவெக அரசு
நமது சிறப்பு நிருபர்
திமுக ஆட்சியில் 500 மின்சார பஸ் கொள்முதல் செய்வதற்காக வெளியிடப்பட்ட டெண்டரை தவெக அரசு ரத்து செய்துள்ளது.
முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க., அரசு, முந்தைய திமுக ஆட்சியில் கோரப்பட்ட டெண்டர்களை ஆய்வு செய்து முறைகேடு ஏதும் கண்டறிந்தால் ரத்து செய்து வருகிறது. அதன்படி பல்வேறு துறைகளின் 100க்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்களை ரத்து செய்துள்ளது.
தற்போது ஜெர்மனி வங்கி நிதியுதவியுடன் 500 மின்சார பஸ்களை வாங்க முந்தைய திமுக ஆட்சியில் கோரப்பட்ட டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த டெண்டர்கள், நிதி இழப்பை ஏற்படுத்தக் கூடியவை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒப்பந்தம் பெறும் தனியார் நிறுவனங்களே பஸ்களை வாங்கி, இயக்கி, பராமரிக்கும். அரசு ஒரு கிலோமீட்டருக்கு நிலையான கட்டணத்தை மட்டுமே செலுத்தும் வகையில் ஒப்பந்தத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: மின்சார பஸ்களை வாங்குவதற்கும், அதற்கு கண்டக்டர்களை நியமிப்பதற்கும், பராமரிப்புச் செலவுகளை ஏற்பதற்கும் போதிய நிதியில்லை. இதனால் தனியார் நிறுவனங்களே பஸ்களை வாங்கி, இயக்கி, பராமரிக்க ஒப்புதல் கோரி கடிதம் எழுதியுள்ளோம், அதன் பதிலுக்காகக் காத்திருக்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
ஏற்கனவே கடந்த வாரம், ஹிந்து சமய அறநிலையத்துறை, பல்வேறு கோவில்களில் அறிவிக்கப்பட்டிருந்த ரூ.245.85 கோடி மதிப்பிலான 46 கட்டுமானப் பணிகளுக்கான நிர்வாக அனுமதிகளை அதிரடியாக ரத்து செய்துள்ளது. நீதிமன்றத் தடையாணைகள் மற்றும் கோயில்களின் நிதிச்சுமையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
1000 கோடி ரூபாய்
தமிழகத்தில் 500 மின்சார பஸ்களை இயக்க, முந்தைய திமுக ஆட்சியில் டெண்டர் விடப்பட்டது. இவற்றில், 320 பஸ்கள் சென்னை, 100 பஸ்கள் மதுரை, 80 பஸ்கள் கோவையில் இயக்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்த பஸ்களுக்கான மொத்த செலவு, 1000 கோடி ரூபாய். இதற்கான சார்ஜிங் ஸ்டேஷன், மின்சார தடம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கான செலவினங்கள் தனியானவை.
இதற்கான டெண்டரில் 2 நிறுவனங்கள் போட்டியிட்டன. இதில், அசோக் லேலண்ட் மற்றும் ஜேபிஎம் ஆகிய இரு நிறுவனங்கள் போட்டியிட்டன. இதில் டில்லி உள்ளிட்ட பல நகரங்களில் மின்சார பஸ்களை இயக்கும் ஜேபிஎம் நிறுவனம், டெண்டரில் குறைந்த தொகை குறிப்பிட்டிருந்தது. இத்தகைய சூழ்நிலையில் தான், டெண்டரை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.
வாசகர் கருத்து (23)
சுந்தரம் விஸ்வநாதன் - coimbatore,இந்தியா
24 ஜூன்,2026 - 12:23 Report Abuse
அப்படியே, சென்னையில் தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் மின்சார பஸ்கள் கருப்பு சிவப்பு வண்ணத்தில் பெயிண்ட் அடித்திருப்பதையும் மாற்றவேண்டும். 0
0
V Venkatachalam, Chennai-87 - Chennai,இந்தியா
24 ஜூன்,2026 - 15:58Report Abuse
இவனுங்க ட்ரெஸ்க்கு மட்டுமே அந்த பெயிண்ட் அடிக்கலை. மற்ற இடத்தில் எல்லாம் அடிச்சி வச்சிருக்கானுங்க. 0
0
Reply
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
24 ஜூன்,2026 - 12:20 Report Abuse
நிதித்துறை, மின்சார துறை தொடர்ந்து போக்குவரத்து துறை, அறநிலையத் துறை, வருமான வரித்துறை, டாஸ்மாக் என்று எல்லா துறைகளிலும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
24 ஜூன்,2026 - 12:14 Report Abuse
ஒரு பஸ் 2.25 கோடி ரூபாய். 20% என்று வைத்தால் கூட 45 லக்ஷம் ஒரு பஸ்ஸுக்கு. 500 பஸ்ஸுக்கு, 225 கோடி ரூபாய் கைமாறுவதை தடுத்து விட்டிர்களே பாவிகளா, என்று எவனோ குலுங்கி குலுங்கி அழும் சத்தம் கேட்கிறதா? 0
0
Reply
RRY - Marthandam,இந்தியா
24 ஜூன்,2026 - 12:06 Report Abuse
எஙஹ ஊர் மார்த்தாண்டம் டு தேங்கபட்டணம் பஸ் சுமார் 6 பருந்துகள் 10 மினுட் இடைவெளிவிட்டு போய்க்கிட்டயே
இருக்கும் மொத்த தூரம் 22 கிம்
ஆச்சர்யம் என்னவெண்டால் பஸ்ஸில் 5 அல்லது 8 பேர் மட்டுமே
இருப்பார்கள் நல்லா என்ஜோய் பன்னுரங்க ஊழி யர்கள் 0
0
Reply
GMM - KA,இந்தியா
24 ஜூன்,2026 - 11:35 Report Abuse
மின்சார வாகனங்கள் புதிய தொழில் நுட்பம். தமிழக போக்கு வரத்து கழகம் எடுத்து நடத்தினால் நஷ்டம் தான் வரும். முதலீடு செய்து பராமரித்து லாபத்தில் பங்கு பெறுவது எளிது. மின்சாரம், பஸ் நிறுத்தம் பராமரிப்பு வசதி மாநில நிர்வாகம். மேலும் அனைத்து பஸ் நிலையங்களும் உள்ளூர் பெயரில் மாற்ற வேண்டும். ஆரப்பாளையம், மதுரை. பெரியார் பெயர் நீக்கி பழைய ஊர் வைக்க வேண்டும். மின்சார பஸ் கொள்முதல் டெண்டர் ரத்து சரியே. ஒரு நாளுக்கு ஒரு சீர் திருத்தம். திராவிடம் முடங்கி விடும். 0
0
Reply
Nesan - JB,இந்தியா
24 ஜூன்,2026 - 10:42 Report Abuse
நல்ல முடிவு. இருக்கிற பேருந்தை சரி செய்து, ஒட்டுங்கள். பரக்கிற விசத்தை கொஞ்சம் நிதி நிலை சரியானவுடம் பார்க்கலாம். அனைத்து துறைகளில் உள்ள அவலங்களை சரி செய்யுங்கள், கோடி புன்னியம் கிடைக்கும். தி.திராவிடங்கலள் 60 ஆண்டுகளாக தழிழ் நாட்டை குட்டிசுவராக்கிட்டான்... 0
0
Reply
வில்லிபுத்தூரான் - xhennai,இந்தியா
24 ஜூன்,2026 - 10:19 Report Abuse
கர்நாடக மாதிரி சிறப்பு.பேருந்துகள் தனியாரிடம்.அதை இயக்குவது அரசு நடத்துனரும் ஓட்டுநரும்.வண்டி உரிமையாளருக்கு வாடகை கொடுக்கும். 0
0
Reply
Sathish Subramanian - ,இந்தியா
24 ஜூன்,2026 - 09:51 Report Abuse
ஏற்கனவே இருக்கிற பேருந்துகள் அனைத்தும் சரிவரே பழுது பார்த்து பராமரிப்பதன் பேரில் இந்த நடவடிக்கை பணிமனையில் நிறையே மின்சார பேருந்துகள் உள்ளன அதை சரியான நேரத்தில் ஒரு குறிப்பிட்ட இடைவேளையில் அணைத்து எண் பேருந்துகளும் விட இந்த தவெக அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன் 0
0
Reply
Vayalur Visu - chennai,இந்தியா
24 ஜூன்,2026 - 09:43 Report Abuse
புலம்பு தம்பி புலம்பிக்கொண்டேயிரு 0
0
Reply
Aam Aathmi (Mango Man) - mumbai,இந்தியா
24 ஜூன்,2026 - 09:27 Report Abuse
மாமன் சீர் என்று அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் .. எவ்வளவு பெரிய ஆபத்தை விளைவிக்க கூடும் என்று தெரிந்து செயல்படுகிறார்களா ? 0
0
BHARATH - TRICHY,இந்தியா
24 ஜூன்,2026 - 14:42Report Abuse
18000 ருபாய் முந்தின அரசாங்கம் கொடுத்த நிதிலேந்து இப்போ 1 கிராம் பொண்ணு 12000 ரூபாய்க்கு பிச்சை போடறார் 0
0
Reply
மேலும் 11 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement