குமரலிங்கத்தில் இரு ஆண்டுகளாக திறக்கப்படாத சுகாதார வளாகம்
உடுமலை: குமரலிங்கம் பேரூராட்சியில், சுகாதார வளாகம் கட்டப்பட்டு, இரு ஆண்டுகளாக திறக்கப்படாமல் வீணாகி வருகிறது.
மடத்துக்குளம், குமரலிங்கம் பேரூராட்சி, சாமராயபட்டி, ஜெ.ஜெ., நகர் பகுதியில், பேரூராட்சி நிர்வாகம் சார்பில், ரூ.12 லட்சம் செலவில், இரு ஆண்டுக்கு முன் சுகாதார வளாகம் அமைக்கப்பட்டது.
இதற்கு தேவையான தண்ணீர் வசதி செய்யாமல், இரு ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் வீணாகி வருகிறது. இப்பகுதி மக்கள், கழிப்பிட வசதி இல்லாமல் பாதித்து வருகின்றனர்.
திறந்த வெளி கழிப்பிடமும் சுற்றிலும் உருவாகியுள்ளதால், சுகாதாரக்கேடும் ஏற்பட்டு வருகிறது. எனவே, பேரூராட்சி நிர்வாகம் கழிப்பிடத்திற்கு தேவையான தண்ணீர் வசதி செய்து, மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement