ஷேர் ஆட்டோ கவிழ்ந்து 4 பெண்கள் படுகாயம்
கும்மிடிப்பூண்டி: கும்மிடி ப்பூண்டி அருகே, ஷேர் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில், நான்கு பெண்கள் படுகாயம் அடைந்தனர்.
கும்மிடிப்பூண்டியில் இருந்து ஆரம்பாக்கம் நோக்கி, ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட ஷேர் ஆட்டோ ஒன்று, நேற்று 8 பயணியருடன் சென்றுகொண்டிருந்தது.
சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், எளாவூர் அடுத்த சின்னஓபுளாபுரம் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, மைய தடுப்பில் மோதி, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக, வாகனங்கள் ஏதும் வராததால், ஆட்டோவில் பயணித்த அனைவரும் உயிர் தப்பினர்.
இருப்பினும், ஆட்டோவில் பயணித்த, மெதிப்பாளையம் ஷகிலா, 47, மேலக்கழனி யசோதா, 62, ஆரம்பாக்கம் தேசம்மா, 49, ஊத்துக்கோட்டை கோகிலா, 40, ஆகிய நான்கு பேர், படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் நான்கு பேரும், கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகி ன்றனர். ஆட்டோ டிரைவர் தப்பி ஓடினார்.
விபத்து குறித்து, கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து, தலைமறைவான ஆட்டோ டிரைவரை தேடி வருகின்றனர்.