மரக்கன்று நடும் விழா
செஞ்சி: அப்துல் கலாம் வல்லரசு இந்தியா இயக்கம், அப்துல் கலாம் ஐ.ஏ.எஸ்., அகாடமி சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு செஞ்சிக்கோட்டை வீர ஆஞ்சநேயர் கோவில் அருகே மரக்கன்று நடும் விழா நடந்தது.
வல்லரசு இந்தியா இயக்க நிறுவனர் கண்ணன் தலைமை தாங்கினார். தாசில்தார் கார்த்திகேயன் மரக்கன்று நட்டு துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு தன்னார்வலர் அமைப்பு உறுப்பினர் ஹரிவர்மன் முன்னிலை வகித்தார்.
ஐ.ஏ.எஸ்., அகாடமி பயிற்றுநர்கள் அருள்தாஸ், புகழரசன் மற்றும் மாணவர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement