தம்பதியை தாக்கிய 6 பேர் மீது வழக்கு
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே குடிபோதையில் தம்பதியைத் தாக்கிய 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பூசாரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை மகன் ராஜேந்திரன், 39; கூலித் தொழிலாளி.
இவர் கடந்த 2ம் தேதி இரவு 9:30 மணியளவில் அவரது மனைவியுடன் பெண்ணைவலம் கிராமத்தில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு தனது பைக்கிற்கு பெட்ரோல் போடுவதற்காக சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த பூசாரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார், ரவிக்குமார், மணிவண்ணன், ரகுபதி, செந்தில், சதீஷ் ஆகிய 6 பேரும் சேர்ந்து குடிபோதையில் ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரியிடம் தகராறில் ஈடுபட்டு இருவரையும் தாக்கினர்.
இது குறித்து ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் சிவக்குமார், ரவிக்குமார் மணிவண்ணன் உட்பட 6 பேர் மீது திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.