மகள் மாயம் : தாய் புகார்

விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே மகளைக் காணவில்லை என தாய், போலீசில் புகார் அளித்துள்ளார்.

விக்கிரவாண்டி அடுத்த கப்பியாம்புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் மகள் ஜனனி, 22; பி.காம்., பட்டதாரி. வீட்டில் இருந்த இவரை நேற்று முன்தினம் முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து அவரது தாய் அற்புதவள்ளி அளித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement