ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை; 5.25 சதவீதமாக நீடிக்கும் என அறிவிப்பு

நமது நிருபர்



வங்கிகளின் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை; 5.25 சதவீதமாக நீடிக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் ரெப்போ வட்டி விகிதம் . இரு மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி கூடி , ரெப்போ வட்டி விகிதம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கும். அதன் படி , மூன்று நாள் நிர்வாகக் குழு கூட்டத்துக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதம் குறித்து இன்று ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டது.

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை. ரெப்போ வட்டி விகிதம் 5.25%மாக தொடரும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார். இதனால் வீடு, வாகனக் கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை.

Advertisement