அதிக வெப்ப அபாயத்தில் 14 இந்திய நகரங்கள்: ஆக்ஸ்போர்டு ஆய்வில் அதிர்ச்சி

5


புதுடில்லி: உலகளவில் அதிக வெப்பத்தால் பாதிக்கப்படும் முதல் 50 நாடுகளில் இந்தியாவைச் சேர்ந்த 14 நகரங்கள் இடம் பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த இரு நகரங்களும் இடம்பிடித்துள்ளன.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், உலகளவில் குறிப்பிடத்தக்க வெப்ப அபாயத்தை எதிர்கொள்ளும் முதல் 50 நகரங்களில் இந்தியாவின் 14 நகரங்களை அடையாளம் கண்டுள்ளது. அகமதாபாத், நாக்பூர் மற்றும் மதுரை ஆகிய நகரங்கள் இந்த பட்டியலில் இந்திய அளவில் முன்னணியில் இருப்பதுடன், உலகளவில் அதிகம் பாதிக்கப்படக்கூடிய முதல் 10 நகரங்களின் பட்டியலிலும் இடம் பிடித்துள்ளன.

உலகளவில் வெப்பத்தால் அதிகம் பாதிக்கப்படக் கூடிய நகரமாக ஈராக்கின் அல் பஸ்ரா அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா மற்றும் கானா ஆகிய நாடுகளில் உள்ள பெரும்பாலான நகரங்களே இதில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

அதிகப்படியான வெப்பநிலை பாதிப்பு, மக்கள்தொகை பாதிப்புத்தன்மை மற்றும் குறைந்த அளவிலான சமாளிக்கும் திறன் கொண்ட அதிக ஆபத்துள்ள நகரங்களில் 95 சதவீதத்திற்கும் அதிகமானவை தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளன.

உலகளாவிய முதல் 50 நகரங்களின் பட்டியலில் ஆமதாபாத், நாக்பூர், மதுரை, போபால், கான்பூர், புனே, பாட்னா, ஹைதராபாத், பெங்களூரு, கோல்கத்தா, ஜெய்ப்பூர், லக்னோ, மும்பை மற்றும் சென்னை ஆகிய இந்திய நகரங்களும் இடம்பெற்றுள்ளன. அதில், ஆமதாபாத், நாக்பூர் மற்றும் மதுரை ஆகிய நகரங்கள் இந்த பட்டியலில் இந்திய அளவில் முன்னணியில் இருப்பதுடன், உலகளவில் அதிகம் பாதிக்கப்படக்கூடிய முதல் 10 நகரங்களின் பட்டியலிலும் இடம் பிடித்துள்ளன. அதேபோல, முக்கிய சுற்றுலாத் தலமாக இருக்கக்கூடிய ஜெய்ப்பூர், வெப்பத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளது.

Advertisement