வாலிபருக்கு கத்திக்குத்து: ரவுடிக்கு 'காப்பு'
சேலம்; சேலம், ஜான்சன்பேட்டை, கிழக்கு தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ், 40. பெயின்ட் அடிக்கும் தொழிலாளியான இவர், நேற்று காலை வீட்டில் இருந்து வெளியே வந்தார். அப்போது அவரது அண்ணனிடம் ஒருவர் தகராறு செய்துள்ளார்
. இதனால் தகராறை விலக்கி விட, மோகன்ராஜ் முயன்றார். அங்கிருந்த நபர், கத்தியால் மோகன்-ராஜை குத்தியுள்ளார். இதில் அவரது கண் அருகே காயம் ஏற்பட, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அஸ்தம்பட்டி போலீசார் விசா-ரித்ததில், அஸ்தம்பட்டி, ஹவுசிங் போர்டை சேர்ந்த ரவுடி சுகேல், 21, கத்தியால் குத்தியது தெரிந்தது. அவரை, போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரவீன் சக்கரவர்த்தியின் பதிவு அதிகப் பிரசங்கித்தனம்: மார்க்சிஸ்ட் கண்டனம்
-
மணிப்பூரில் மீண்டும் வன்முறை: கணவன், மனைவி உட்பட 3 பேர் சுட்டுக்கொலை
-
அண்ணாமலை ராஜினாமா; பாஜ ஏற்பு
-
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை; 5.25 சதவீதமாக நீடிக்கும் என அறிவிப்பு
-
முதல்வர் விஜய் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்; முக்கிய அறிவிப்புகள் வெளியாகும்?
-
அதிக வெப்ப அபாயத்தில் 14 இந்திய நகரங்கள்: ஆக்ஸ்போர்டு ஆய்வில் அதிர்ச்சி
Advertisement
Advertisement