மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு மாணவ, மாணவியர் உற்சாகம்

நாமக்கல்:நாமக்கல் மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து நேற்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன.

தமிழகத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. 45 நாள்களுக்கு பிறகு அனைத்து பள்ளிகளும் 1ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளிகள் 4-ம் தேதியான நேற்று திறக்கப்பட்டன.
நாமக்கல் மாவட்டத்தில், 922 அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகள், 179 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், 13 சுய நிதி பள்ளிகள், 200-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டன. அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவியருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல் பருவ பாடப்புத்தகங்கள், நோட்டுகள், சீருடை, கல்வி உபகரணங்கள் ஆகியவை வழங்கப்பட்டன.
நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், தலைமையாசிரியர் சுமதி தலைமையில் மாணவியருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக எம்.எல்.ஏ., திலீப் பங்கேற்று, மாணவியருக்கு பாட புத்தகங்களை வழங்கினார்.

Advertisement