கிராவல் மண் கடத்தல் அதிகாரிகள் ஆய்வு

எருமப்பட்டி:போடிநாய்க்கன்பட்டி பகுதியில், கிராவல் மண் வெட்டி எடுப்பதாக வந்த புகாரையடுத்து, அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

எருமப்பட்டி யூனியன் போடிநாய்க்கன்பட்டி, பொட்டிரெட்டிபட்டி ஆகிய கொல்லி மலை அடிவாரத்தில், இரவு நேரங்களில் கிராவல் மண் கடத்தப்படுவதாக புகார் எழுந்தது. இது குறித்து நமது நாளிதழில் கடந்த, 3ல் செய்தி வெளியிடப்பட்டது.
இதையடுத்து, வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விவசாய நிலத்தில் கிராவல் மண் வெட்டப்பட்டு வருகிறதா என ஆய்வு செய்தனர். மேலும்பழைய மண் குழிகள், புதியதாக வெட்டிய மண் குழிகளை ஆய்வு செய்ததுடன், கிராவல் மண் எடுக்கும் பகுதியை வி.ஏ.ஓ,, வருவாய் ஆய்வாளர்கள் தினமும் ஆய்வு செய்ய வேண்டும் என, அதிகாரிகள்
உத்தரவிட்டனர்.

Advertisement