தங்கம் விலை சவரனுக்கு ரூ.400, வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் சரிவு
சென்னை: சென்னையில் இன்று (ஜூன் 05) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 440 ரூபாய்க்கும், கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து 14,430 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஜூன் 03) ஆபரண தங்கம் கிராம், 14,500 ரூபாய்க்கும், சவரன், 1,16,000 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 290 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று (ஜூன் 04), தங்கம் விலை கிராமுக்கு, 20 ரூபாய் குறைந்து, 14,480 ரூபாய்க்கு விற்பனையானது.
சவரனுக்கு, 160 ரூபாய் சரிவடைந்து, 1,15,840 ரூபாய்க்கு விற்கப் பட்டது. வெள்ளி கிராமுக்கு ஐந்து ரூபாய் குறைந்து, 285 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 5,000 ரூபாய் சரிவடைந்து, 2.85 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இன்றைய நிலவரம்
இந்நிலையில் இன்று (ஜூன் 05) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 440 ரூபாய்க்கும், கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து 14,430 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியும் சரிவு
வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 280 ரூபாய்க்கும், கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் குறைந்து 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சிறப்பு வீடியோ!
போக்கு காட்டும் தங்கம்: இப்போ நகை வாங்கலாமா?; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
இன்றைய காலகட்டத்தில் வெள்ளிவெள்ளி கொடி செயின் வாங்குவதை அவ்வளவு கஷ்டமாக இருக்கிறது இதில் தங்கம் எப்படி வாங்க போவோம் என்று வருத்தம் அளிக்கிறதுமேலும்
-
பிரவீன் சக்கரவர்த்தியின் பதிவு அதிகப் பிரசங்கித்தனம்: மார்க்சிஸ்ட் கண்டனம்
-
மணிப்பூரில் மீண்டும் வன்முறை: கணவன், மனைவி உட்பட 3 பேர் சுட்டுக்கொலை
-
அண்ணாமலை ராஜினாமா; பாஜ ஏற்பு
-
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை; 5.25 சதவீதமாக நீடிக்கும் என அறிவிப்பு
-
முதல்வர் விஜய் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்; முக்கிய அறிவிப்புகள் வெளியாகும்?
-
அதிக வெப்ப அபாயத்தில் 14 இந்திய நகரங்கள்: ஆக்ஸ்போர்டு ஆய்வில் அதிர்ச்சி