ஓமன் எண்ணெய் கிடங்கு அருகே ஈரான் ட்ரோன் தாக்குதல்;கச்சா எண்ணெய் ஏற்றுமதி நிறுத்தம்
நமது நிருபர்
ஓமனில் எண்ணெய் கிடங்கு அருகே ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் ஏற்றுமதி தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது.
மேற்காசிய நாடான ஈரான் - அமெரிக்கா இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமலில் இருந்தபோதிலும், நிரந்தர அமைதிக்காக நடந்து வரும் பேச்சில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தற்போது ஓமனில் எண்ணெய் கிடங்கு அருகே ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் ஏற்றுமதி தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது.
ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து வளைகுடாப் பகுதிகளில் பதற்றம் கடுமையாக அதிகரித்துள்ளது. சில தினங்களுக்கு முன் குவைத்தில் ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதல்களில் குவைத் சர்வதேச விமான நிலையத்தின் வசதிகள் சேதமடைந்தன.
இதில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டார். 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தற்போது ஓமனில் ஈரான் தாக்குதல் நடத்தி இருப்பது போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
அப்படி போடு,இதை சாக்கா வெச்சி இன்னும் ஒரு 10 ரூவா கூட்டலாம்,மேலும்
-
பிரவீன் சக்கரவர்த்தியின் பதிவு அதிகப் பிரசங்கித்தனம்: மார்க்சிஸ்ட் கண்டனம்
-
மணிப்பூரில் மீண்டும் வன்முறை: கணவன், மனைவி உட்பட 3 பேர் சுட்டுக்கொலை
-
அண்ணாமலை ராஜினாமா; பாஜ ஏற்பு
-
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை; 5.25 சதவீதமாக நீடிக்கும் என அறிவிப்பு
-
முதல்வர் விஜய் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்; முக்கிய அறிவிப்புகள் வெளியாகும்?
-
அதிக வெப்ப அபாயத்தில் 14 இந்திய நகரங்கள்: ஆக்ஸ்போர்டு ஆய்வில் அதிர்ச்சி