கணினி அறிவியலுக்கு மவுசு
கோவை: கோவை அரசு கலைக்கல்லுாரியில், 23 இளங்கலை படிப்புகளுக்கான 1,727 இடங்களுக்கான விண்ணப்ப பதிவு மே 7 முதல் 29 வரை நடந்தது. இதுவரை, 19 ஆயிரத்து 483 மாணவர்களும், 17 ஆயிரம் 894 மாணவியர், 21 திருநங்கைகள் என, 37 ஆயிரத்து 398 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
ஏ.ஐ., மெஷின் லேர்னிங், டேட்டா அனலிட்டிக்ஸ், சைபர் செக்யூரிட்டி துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகளால், கணினி அறிவியல் படிப்புகள் மாணவர்களின் முதல் தேர்வாக உள்ளன. இதனால், கணினி அறிவியல் பாடத்திற்குஅதிகபட்சமாக 8,763 விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதற்கு அடுத்தபடியாக பி.பி.ஏ., வுக்கு 8,061, தமிழ் பாடத்துக்கு 7,631 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. நாளை முதல் சிறப்பு பிரிவினருக்கும், ஜூன் 8ம் தேதி முதல்மதிப்பெண் வாரியாக பொதுப்பிரிவினருக்கும் கலந்தாய்வு நடக்கிறது.
இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு மீண்டும் ஜூன் 1ம் தேதி முதல் வாய்ப்பு வழங்கப்படுகிறது. மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இணையதளம் வழியாக விண்ணப்பிக்க இயலாதவர்கள், கல்லுாரியில் செயல்படும் சேர்க்கை உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும்
-
புதிய கட்சி தொடங்குவதன் பின்னணியில் பா.ஜ.,
-
கூட இருந்தே குழி தோண்டிய கூட்டணி கட்சியினர்
-
தேர்தலுக்கு முன்பே ம.தி.மு.க., பேசியிருக்கலாம்
-
பிரிட்டனில் ஹெலிகாப்டர் விபத்து; கடற்படையில் இருந்த ஒரேயொரு பெண் கமாண்டோ உள்பட 3 பேர் பலி
-
பிரதமர் மோடிக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிப்பதில் பலனில்லை; சொல்கிறார் ரஷ்ய அதிபர் புடின்
-
பிரதமர் மோடியுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும்; அதிபர் டிரம்ப்