பிரிட்டனில் ஹெலிகாப்டர் விபத்து; கடற்படையில் இருந்த ஒரேயொரு பெண் கமாண்டோ உள்பட 3 பேர் பலி
லண்டன்: பிரிட்டனில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், அந்நாட்டின் கடற்படையில் பணியாற்றி வந்த ஒரே ஒரு பெண் கமாண்டோ உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
தென்மேற்கு பிரிட்டனில் உள்ள டெவான் மாகாணத்தில் வழக்கமான பயிற்சியின் போது மெர்லின் எம்கே4 ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில், 31 வயதான லில்லி மே பிஷர் என்ற பெண் கமாண்டோ மற்றும் ராயல் நேவி கடற்படையைச் சேர்ந்த இருவர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
லெப்டினன்ட் லில்லி தனது இறுதி விமானப் பயிற்சி மதிப்பீட்டின் போது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இவர் இந்த மாதத்தில் ஹெலிகாப்டர் பைலட்டாகத் தகுதி பெறவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்ட அளவு பாலோயர்களைக் கொண்ட லில்லி, ராணுவத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து பேசி வந்தார்.
வாசகர் கருத்து (2)
Subramanian - ,
05 ஜூன்,2026 - 13:42 Report Abuse
ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி 0
0
Reply
Raajan - ,இந்தியா
05 ஜூன்,2026 - 11:12 Report Abuse
Sad 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement