பிரதமர் மோடியுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும்; அதிபர் டிரம்ப்
வாஷிங்டன்: பிரதமர் மோடியை ஒரு நல்ல நண்பர் என்று வர்ணித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவும், அமெரிக்காவும் விரைவில் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை எட்டும் என தெரிவித்தார்.
60 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் கட்டாய உழைப்பின் மூலம் தயாரிக்கப் படுகின்றன என்று விசாரணைகள் வெளிப்படுத்தி உள்ளதாகக் கூறி, 12.5 சதவீதம் கூடுதல் சுங்க வரியையும் அமெரிக்கா அறிவித்தது. இந்நிலையில் வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் அதிபர் டிரம்ப் கூறியதாவது:
பல ஆண்டுகளாக, இந்தியா அமெரிக்காவைச் சுரண்டி வந்தது. அவர்கள் எங்கள் மீது பெரும் வரிகளை விதித்துவிட்டு, எதையும் செலுத்தவில்லை. இப்போது நிலைமை தலைகீழாக மாறி, நாங்கள் இந்தியாவுடன் இணைந்து நிறைய பணம் சம்பாதிக்கிறோம்.
ஆனால் இந்தியாவும், அமெரிக்காவும் விரைவில் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை எட்டும், ஏனென்றால் பிரதமர் நரேந்திர மோடியை எனக்கு மிகவும் பிடிக்கும்; அவர் எனது நல்ல நண்பர், நாங்கள் நன்றாகப் பழகுகிறோம். எங்களுக்குள் ஒரு நல்ல உறவு இருக்கிறது.
ஈரானிடம் கடற்படையும் இல்லை, விமானப்படையும் இல்லை, நாங்கள் அவர்களின் தலைமையை அழித்துவிட்டோம். பிறகு, அவர்கள் போரில் மிகவும் சிறப்பாகச் செயல்படுவதாகப் போலிச் செய்திகளில் படிக்கிறீர்கள்.
இது நம்பமுடியாதது. அவர்களிடம் 159 கப்பல்கள் உள்ளன, அவை அனைத்தும் கடலின் அடியில் கிடக்கின்றன, நாங்கள் அங்கு அவற்றைப் புகைப்படம் எடுத்துள்ளோம். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.
டிரம்ப் பல்லை காட்டுகிறார் என்றால் பம்பு அடிக்கப்போறார் என்று பொருள்.
மோடிடா நண்பன்டா,பெட்ரோல் விலை ஏறுதுடா,
The more he talks more the tariff on india
தானே இந்த உலகின் வல்லரசு என்ற திமிரில் பேசுகிறார் ட்ரம்ப். ஆனால், எதுவும் நிரந்தரமல்ல. மாறும் விரைவில். இந்தியாவும் வல்லரசாகும்.
ட்ரம்ப்ஐ வழிக்கு கொண்டுவர ஒரே ஒரு ஐடியாதான் இருக்கு. பேசாமல் கட்டுமர திருட்டு திமுகவினர் ஒரு பத்தாயிரம் பேரை டிக்கெட் இல்லாமல் அமெரிக்காவிற்கு அனுப்பிவைத்து நைஸாக ட்ரம்ப் கட்சியில் சேர்த்துவிட வேண்டும். அவர்கள் வெறும் பத்தே வருடங்களில் ஊழல்கள் மற்றும் லஞ்சங்கள் மூலம் மொத்த அமெரிக்காவையும் ஆட்டையை போட்டு கட்டுமர திருட்டு திமுகவின் தலைமை குடும்பத்து சொத்தாக மாற்றிவிட்டு தலைமை குடும்பத்து நான்காம் தலைமுறை ஆட்களை அமெரிக்க அதிபராக ஆக்கிவிடுவார்கள். பிறகு இந்தியா அந்த தலைமை குடும்பத்திற்கு வருட வருடம் பத்தாயிரம் கோடிகளை ஊழல் மற்றும் லஞ்ச கப்பமாக கொடுத்தால் போதும். அந்த குடும்பம் இந்தியாவில் இருந்து வரும் பொருட்களுக்கு எந்த வரியும் விதிக்காமல் பார்த்துக்கொள்ளும். இந்தியாவும் தப்பி பிழைக்கும். ஹி...ஹி...ஹி...
எப்போதெல்லாம் இப்படி பேசுகிறரோ அப்போதெல்லாம் எதாவது பெரிய இடியை இறக்க போகிறார் என்பது உறுதி.
இப்போது எதற்கு இதைப்பற்றி பேசனும் ? ஏதோ வில்லங்கமா செய்யப் போகின்றான் என்று மட்டும் புரிகிறது.
இவன் கூட ஒரு ஒப்பந்தமும் வேண்டாம்.
எனக்கு இந்தியாவை பிடிக்குமென்று சொல்லியே கழுத்தை அறுப்பவன் இந்த அமெரிக்க அதிபர் பிறகு இந்தியா அமெரிக்காவை சுரண்டியது என்று எதற்காக சொல்ல வேண்டும் வாய்க்கு வந்ததெல்லாம் பேசும் டிரம்புக்கு வாய் அடக்கம் தேவைமேலும்
-
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு பிரவீன் - தாகூர் கடும் போட்டி
-
புதிய இயக்கம் தொடங்கினார் நடிகர் ரஜினி மனைவி லதா
-
ரயில்கள் மீது கல், பாட்டில் வீச்சு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
-
தமிழக மக்களுக்கு புரியும் மொழியில் தேசிய கட்சிகள் பேசவில்லை!
-
தினமும் 2 மணி நேரம் அறிவிக்கப்படாத மின் தடை
-
அறம், பொருள், இன்பம் என்ற பெயரில் 436 தொலைநோக்கு செயல் திட்டங்கள்: தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு