நாயால் தொழிலாளி பலி

ஈரோடு:ஈரோடு திண்டல் வீரப்பம்பாளையத்தை சேர்ந்தவர் மாரிமுத்து, 56, கூலி தொழிலாளி. கடந்த, 31ம் தேதி மதியம் மொபட்டில் பூந்துறை சேமூர் பகுதியில் அவல் பூந்துறை நோக்கி சென்றார்.


நாய் சாலையின் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி விழுந்தார். பலத்த காயமடைந்த நிலையில் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், நேற்று முன்தினம் மாலை இறந்தார். அறச்சலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement