ஜூன் 9ல் வெள்ளியும் வியாழனும் அருகருகே தோன்றும் அரிய நிகழ்வு!

3

சென்னை: ஜூன் 9ம் தேதி வானில் மிகப்பிரகாசமாகத் தெரியும் இரு கோள்களான வெள்ளியும், வியாழனும் வழக்கத்திற்கு மாறாக மிக அருகில் தோன்றும் அரிய நிகழ்வு நடைபெற இருக்கிறது; சூரிய மறைவுக்குப் பிறகு 45 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை இந்த அற்புதக் காட்சியைக் காணலாம்.

சூரியனைச் சுற்றி நீள் வட்டப் பாதையில் அனைத்து கோள்களும் சுற்றி வருகின்றன. அப்படிச் சுற்றி வரும்போது ஒரு சில கோள்கள் மிக அருகருகே தோன்றும். அந்தவகையில் வரும் ஜூன் 9ம் தேதி வெள்ளியும், வியாழனும் வழக்கத்திற்கு மாறாக மிக அருகில் தோன்றும் அரிய நிகழ்வு நடைபெற இருக்கிறது; சூரிய மறைவுக்குப் பிறகு 45 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை இந்த அற்புதக் காட்சியைக் காணலாம்.

இந்த நிகழ்வின் போது, சூரிய குடும்பத்தின் மிகப்பிரகாசமான இரண்டு கோள்களான வெள்ளியும், வியாழனும் வெறும் 0.5 முதல் 1.6 டிகிரி இடைவெளியில் மிக நெருக்கமாகத் தோன்றும். ஒன்றுடன் ஒன்று தொடுவது போலவோ அல்லது இரட்டைப் கிரகங்கள் போலவோ இவை காட்சியளிக்கும்.

சூரிய மறைவுக்குப் பிறகு 45 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை இந்த அற்புதக் காட்சியைக் காணலாம். மேற்கு - வடமேற்கு திசையில் வானத்தை பார்க்க வேண்டும். இந்த இரு கோள்களும் மிகவும் பிரகாசமாக ஜொலிப்பதால், இதைப் பார்ப்பதற்குத் தொலைநோக்கி தேவையில்லை; உங்கள் கண்களாலேயே எளிதாகக் கண்டுகளிக்கலாம்.


வானிலை ஆய்வாளர்கள் கூறியதாவது: வியாழன் பூமியிலிருந்து வெகு தொலைவில் இருப்பதால், அது சற்று மங்கலாகத் தெரியும். இரு கோள்களையும் மக்கள் வெறும் கண்களால் பார்க்க முடியும்.

இந்த அரிய நிகழ்வு கடைசியாக கடந்த 2025ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி நிகழ்ந்தது.

இந்த இரு கோள்களும் வரும் ஜூன் 9ம் தேதிக்கு பிறகு, 2027ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி மீண்டும் அருகருகே தோன்றும் அரிய நிகழ்வு நிகழும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement