விஜயுடன் துரை வைகோ சந்திப்பு
சென்னை: ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை வைகோ, சென்னையில் நேற்று முதல்வர் விஜயை சந்தித்து பேசினார்.
தேர்தலில், தி.மு.க., சின்னத்தில் போட்டியிட்டதால், ம.தி.மு.க.,வால், விஜய் தலைமையிலான த.வெ.க., அரசுக்கு ஆதரவு அளித்து, அமைச்சரவையில் இடம் பெற முடியவில்லை.
'தனி சின்னத்தில் ம.தி.மு.க., போட்டியிடாதது தவறு' என, துரை வைகோ கூறி வந்தார். இது தி.மு.க., தலைமையிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சென்னையில், முதல்வர் விஜய் வீட்டிற்கு, நேற்று மாலை துரை வைகோ சென்று, விஜயை சந்தித்தார்.
அப்போது, திருச்சியை, தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை மனுவை அளித்தார். 'இது மிக நல்ல சந்திப்பாக இருந்தது' என, துரை வைகோ தெரிவித்தார்.
வாசகர் கருத்து (1)
C KALIDAS - ,
05 ஜூன்,2026 - 08:31 Report Abuse
இனமான இடைத்தரகர் புரட்சி புயல் என புறப்பட்டு விட்டார்! ஐயகோ நீரல்லவோ ஜனநாயக சிற்பி! 0
0
Reply
மேலும்
-
பிரவீன் சக்கரவர்த்தியின் பதிவு அதிகப் பிரசங்கித்தனம்: மார்க்சிஸ்ட் கண்டனம்
-
மணிப்பூரில் மீண்டும் வன்முறை: கணவன், மனைவி உட்பட 3 பேர் சுட்டுக்கொலை
-
அண்ணாமலை ராஜினாமா; பாஜ ஏற்பு
-
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை; 5.25 சதவீதமாக நீடிக்கும் என அறிவிப்பு
-
முதல்வர் விஜய் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்; முக்கிய அறிவிப்புகள் வெளியாகும்?
-
அதிக வெப்ப அபாயத்தில் 14 இந்திய நகரங்கள்: ஆக்ஸ்போர்டு ஆய்வில் அதிர்ச்சி
Advertisement
Advertisement