விஜய்க்கு உதயநிதி திடீர் கடிதம்

3

சென்னை: 'மத்திய தொகுப்புக்கு, 152 உயர் சிறப்பு மருத்துவ படிப்பு இடங்களை சரண்டர் செய்வதை தடுக்க வேண்டும்' என, முதல்வர் விஜய்க்கு, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கடிதம் எழுதியுள்ளார்.

கடித விபரம்:

உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கான, 152 இடங்களை, அகில இந்திய தொகுப்பிற்கு மாற்றுமாறு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.அந்த வழக்கு விசாரணையின்போது கடந்த, தி.மு.க., அரசு சார்பில் வெற்றிகரமாக வாதங்களை எடுத்து வைத்து, மத்திய தொகுப்புக்கு செல்வது தடுக்கப்பட்டது.

தமிழக இடங்களை ஒப்படைத்த பின், சதவீதத்தை குறைத்து, அகில இந்திய தகுதி அடிப்படையில், அவை நிரப்பப்பட்டால், தமிழக அரசு டாக்டர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே, நிரப்பப்படாமல் உள்ள, 152 உயர் சிறப்பு மருத்துவ படிப்பு இடங்களை, மத்திய தொகுப்புக்கு மாற்றுமாறு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், முதல்வராகிய தாங்கள் தலையிட்டு, மத்திய தொகுப்பிற்கு 'சரண்டர்' செய்யப்படுவதை தடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அரசு டாக்டர்கள், அந்த இடங்களில் சேருவதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Advertisement