சமூக விரோதிகளுக்கு அரசு மீது பயமில்லை

1

@quote@ 'பெண் குழந்தைகளையும், மகளிரையும், அண்ணனாக இருந்து பாதுகாப்பேன்' என, தேர்தலுக்கு முன்பு முழங்கிய விஜய், முதல்வரான பின், தன் ஆட்சியில் நடக்கும், பாலியல் வன்கொடுமைகள் குறித்து, வாய் திறக்க மறுப்பது ஏன்? காவல்துறையில் நடைமுறையில் உள்ள திட்டத்திற்கு, 'ஸ்டிக்கர்' ஒட்டி, பெயரை மாற்றி, உருவாக்கப்பட்ட, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை, தொடங்கி வைக்கக்கூட, காலம் நேரம் பார்க்கும் நிலையில் தான், த.வெ.க., அரசு உள்ளது.
பொதுவாகவே, புதிதாக பொறுப்பேற்கும் ஆட்சியின் செயல்பாடுகளை பார்த்து விட்டு, மெதுவாகத்தான் சமூக விரோதிகள் வெளியே வருவர். ஆனால், இந்த முறை, புதிய அரசு ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதலே, குற்றச் செயல்களில் துணிச்சலுடன் ஈடுபடுகின்றனர். இது, த.வெ.க., அரசின் மீது, அவர்களுக்கு துளியளவு கூட, அச்சமில்லை என்பதையே தெளிவுபடுத்துகிறது.

- தினகரன்



பொதுச்செயலர், அ.ம.மு.க.,quote

Advertisement