இ.கம்யூ., கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஈரோடு:வணிக பயன்பாட்டு சிலிண்டர், பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், இந்திய கம்யூ., கட்சி சார்பில், மாவட்ட பொருளாளர் ரமணி தலைமையில் ஈரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.


மாவட்ட துணை செயலர்கள் கல்யாணசுந்தரம், குணசேகரன், முன்னாள் மாவட்ட செயலர் திருநாவுக்கரசு பேசினர். நிர்வாகிகள் துரையரசன், ராணி, நவீன்குமார், அமல் உன்னிகிருஷ்ணன், ரணதிவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement