பஞ்சர் ஒட்டும் தொழிலாளி மர்மச்சாவு அடித்துக் கொலையா என விசாரணை

அந்தியூர்:அந்தியூர் அருகேயுள்ள குருநாதபுரத்தை சேர்ந்தவர் ராமசாமி, 70; சங்கராப்பாளையம் அருகில் சுமைதாங்கியில், சாலையோரம் டூவீலர்களுக்கு பஞ்சர் ஒட்டும் வேலை செய்து வந்தார். இரவு நேரத்தில் கடையிலேயே தங்கி கொள்வார். இந்நிலையில் நேற்று காலை கடை முன் வாய் மற்றும் தலையில் அடிபட்ட நிலையில் மர்மமாக இறந்து கிடந்தார். வெள்ளித்திருப்பூர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.


மர்ம நபர்கள் அடித்து கொன்றனரா, வாகன விபத்தில் இறந்தாரா என்ற கோணத்தில், அப்பகுதி 'சிசிடிவி' கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement