11 வது முறையாக சதம் அடித்த வெயில்

புதுச்சேரி: கோடைக்காலம் முடிந்தும், தொடர்ந்து அதிகரித்து வரும் வெயில் நேற்று 101.8 டிகிரி பதிவானதால், பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

இந்த ஆண்டு கோடைக்காலத்தில் அக்னி நட்சத்திரம் துவக்கத்திலேயே விட்டு, விட்டு மழை பெய்ததால், ஓரளவு உஷ்ணம் தணிந்தது. இந்நிலையில், கத்திரி வெயில் முடிந்தும் வெயிலின் தாக்கம் குறையாமல் இருந்து வருகிறது.

நேற்று 101.8 டிகிரி வெயில் பதிவானது. இந்த மாதத்திலேயே 11 முறை வெயில் சதம் அடித்துள்ளது. குறிப்பாக, நேற்று இந்த மாதத்தின் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியதால், பொதுமக்கள் கடுமையாக அவதிக்குள்ளாகினர்.

Advertisement