சரஸ்வதி சென்ட்ரல் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்

விழுப்புரம்: விழுப்புரம் சரஸ்வதி சென்ட்ரல் சி.பி.எஸ்.இ., பள்ளியில், 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

பள்ளி மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், பொது அறிவு, அறிவியல் கண்டுபிடிப்புகள், தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் அரசின் போட்டி தேர்வுகளை எதிர்கொள்வதற்கும், மாணவர்களை தயார்படுத்தும் நோக்கில் விரிவான தகவல்களை வழங்கி வருகிறது.

மாணவர்களுக்காக இந்த சிறப்பிதழ், திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை வெளியாகிறது. இதன் மூலம், மாணவர்களுக்கு வினாடி - வினா போட்டிகளையும் நடத்தி ஊக்கப்படுத்தி வருகிறது.

விழுப்புரம் சரஸ்வதி சென்ட்ரல் சி.பி.எஸ்.இ., பள்ளியில், 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

பள்ளி தாளாளர் முத்து சரவணன் தலைமை தாங்கினார். முதல்வர் சுபஸ்ரீ பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பட்டம் இதழ்களை வழங்கி, அதன் சிறப்புகளை விளக்கி பேசினார்.

Advertisement