கூட்டுறவு துறை அமைச்சர் திருத்தணி கோவிலில் தரிசனம்

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கூட்டுறவு துறை அமைச்சர் நேற்று குடும்பத்துடன் வந்து சுவாமி தரிசனம் செய்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் சட்டசபை தொகுதியில், த.வெ.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் காந்திராஜன். இவர், தற்போது கூட்டுறவு துறை அமைச்சராக உள்ளார்.

நேற்று மாலை 6:00 மணிக்கு, அமைச்சர் காந்திராஜன், தனது திருமண நாளை ஒட்டி, மனைவி மற்றும் மகளுடன், திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு வந்தார்.

அவரை, கோவில் இணை ஆணையர் ரமணி வரவேற்றார். தொடர்ந்து, ஆபத்சகாய விநாயகர், சண்முகர், மூலவர், வள்ளி, தெய்வானை மற்றும் உற்சவர் முருகப்பெருமான் ஆகிய சன்னிதிகளில் சிறப்பு பூஜைகள் நடத்தி, அமைச்சர் வழிபட்டார்.

பின், கோவில் நிர்வாகம் சார்பில், அமைச்சருக்கு மலர் மாலை மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. அப்போது, திருவள்ளூர் மேற்கு மாவட்ட த.வெ.க., மாவட்ட செயலர் டில்லிபாபு உட்பட, கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Advertisement