புதிய இயக்கம் தொடங்கினார் நடிகர் ரஜினி மனைவி லதா
சென்னை: நடிகர் ரஜினியின் மனைவி லதா, 'மக்கள் மேடை - மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை திடீரென தொடங்கி உள்ளார்.
நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்து, கொரோனாவை காரணம் காட்டி பின்வாங்கினார். இந்நிலையில், அவரது மனைவி லதா, புதிய மக்கள் இயக்கம் ஒன்றை தொடங்கி உள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறி உள்ளதாவது: மக்கள் மேடை - மக்கள் இயக்கத்துடன் இணைந்து, தமிழகத்துக்காக பணியாற்ற நினைப்பவர்கள், எங்களுடன் ஒன்றாக சேரலாம். பெரிய மக்கள் சேவையாக, மக்கள் சக்தியாக உருவாகி, இந்த மாநிலத்துக்கு பல நன்மைகளை சேர்க்க வாருங்கள். ஒன்றாக சேருவோம்; ஆக்கப்பூர்வமான காரியங்களை செய்வோம். சாமானிய மக்கள் யாராக இருந்தாலும், நல்ல திட்டங்கள், நல்ல எண்ணம், மனம் கொண்டவர்கள் யாராக இருந்தாலும், தமிழகத்துக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைப்பவர்கள், எங்களை தொடர்பு கொள்ளலாம்.
மேலும், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், ஐ.பி.எஸ்., அதிகாரிகள், அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள் உட்பட பல்வேறு அறிஞர்கள், தங்களின் அனுபவங்களை எங்களுக்கு வழங்கலாம். எங்களை தொடர்பு கொண்டு, தமிழகத்துக்காகவும், தொகுதிக்காகவும் நீங்கள் பணியாற்றலாம்.
நாங்கள், மாநிலத்துக்காக பணியாற்றும் உள்ளூர் தலைவர்களை உருவாக்க நினைக்கிறோம். இங்கு பல்வேறு வளங்கள், யோசனைகள், பலம் உள்ளன. அவற்றை மாநிலத்துக்கு வழங்குவதற்காக மக்கள் தயாராக உள்ளனர். அனைத்து தரப்பு மக்களும் எங்களுடன் வாருங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய புரட்சி தாய்
பாபா படம் வெளியான பொழுது அதற்கு காப்புரிமை பெற்று அந்த படம் சம்பந்தமா யாரும் டி ஷர்ட், தொப்பி இன்னும் பல சின்ன வியாபாரிகள் ரசிகர்கள் பாபா எழுத்தை படத்தை உபயோக கிக்க கூடாது. அப்படி உபயோக தித்தால் அதன் ராயல்டி லதா ரஜினி க்கு கொடுக்க வேண்டும் இல்லை என்றால் சட்ட படி நடவடிக்கை எடுக்க படும். காசோலை மோசடி வழக்கில் பெங்களூரு நீதி மன்றத்தில் ஆஜர், வாடகை இடத்தில் பள்ளிக்கூடம் நடத்தி இடத்திற்கு வாடகை கொடுக்காமல் உரிமை கோரி தொல்லை கொடுத்தும் இப்படி பல்வேறு வகையில் மக்களுக்கு நன்மை செய்த புதிய புரட்சி தாய் லதா சின்னம்மா அழைக்கிறார்.
பொது நலன் விரும்பி..... அவர்கள் சேவை பணி வெல்க வாழ்க
இவர்கள் காரியவாதிகள் தங்கள் லாபம் மட்டுமே... விஜயை பார்த்து பொறாமை...
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து மரணத்திலிருந்து மீண்டு வந்து
, தனது உடல்நிலையை சரியில்லாத காரணத்தால் அரசியல் கட்சி தொடங்க இயலாத சூழ்நிலையில் உள்ளதாக கிழட்டு சூப்பர் ஸ்டார் கூறினார்.
தனது சொத்துக்களை காப்பாற்றி கொடுத்த தி. மு. க அதிகாரத்தில் இல்லை, கையில் கொஞ்சம் காசு இருந்தால்.... நீ தான் அதற்கு எஜமானன்....
தங்களது சொத்துக்களை பாதுகாத்துக் கொள்ள என்னென்வெல்லாம் செய்ய வேண்டிய காலத்தின் கட்டாயம்....வீடு போ போ என்கிறது
பொறாமை.வயிற்றெரிச்சல்...புலியைவிஜய் பார்த்து பூணை... திமுகவின் விளையாட்டு..
என்ன திடீர்னு? யார் சொல்லி இதை செய்திருக்கிறார்கள்? வெக்கமாயில்ல?
தொடர்பு கொள்ளலாம் ஆனால் தொடர்புகொள்ளும் வழியில்லை .இதெப்படி ?
அண்ணாமலையின் we the leader அமைப்பின் உறுப்பினர் சேர்க்கை வெளிப்படைத்தன்மை உள்ளது அதில் எத்தனை பேர் சேர்ந்து உள்ளனர் என்ற விவரங்கள் உள்ளன ஆனால் மக்கள் மேடை என்று இயக்கம் தொடங்கி 24மணி நேரம் ஆகுது இதுவரை எத்தனை உறுப்பினர்கள் இணைந்துள்ளனர் என்ற தகவல் இல்லை.... ஏன் மக்கள் மேடைக்கு வெளிப்படைத்தன்மை இல்லை..... அண்ணாமலைக்கு போட்டியாக உருவாக்க பட்டதா இதற்கு ரஜினியின் ஒப்புதல் உள்ளதா ????
வருத்தமளிக்கிறது
அம்மா இட்லி ஆறிப்போச்சு ,,,